முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு கட்டுப்பாடுகள்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, செப். 24 - சட்டசபை தேர்தலைப் போன்று, உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  சுவர் விளம்பரம் எழுதவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:​ 1. எந்த வேட்பாளரும் சாதி​மத பிரச்சினை உருவாகும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. 2. வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. 3. அரசு, தனியார் நிலம், கட்டிடம், சுவர்களில் விளம்பரம் செய்யக்கூடாது, சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது.  4. ஒரு கட்சியின் கூட்டம் நடைபெறும் இடத்தின் வழியாக, மற்றொரு கட்சி ஊர்வலம் நடத்தக்கூடாது. 5. வேட்பாளர் முன் அனுமதி பெற்று பிரசாரம் செய்ய வேண்டும். பிரசாரம் செய்வதற்கு செல்லும் இடம் குறித்து முன்னதாகவே முடிவு செய்து அனுமதி பெற வேண்டும். தாமாகவே இந்த முடிவை மாற்றக்கூடாது. 6. ஊர்வலம்​ பிரசாரத்துக்கு அனுமதி பெற்று செல்லும் இடங்களில் போக்குவரத்து இடையூறு செய்யக்கூடாது. 7. போலீசாரின் அறிவுரைகளையும், உத்தரவுகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 8. கொடி, தோரணங்கள், பேனர்கள், போன்றவற்றை பிரசாரம், ஊர்வலம், பொதுக்கூட்டத்தின் போது மட்டும் அனுமதி பெற்று அமைக்கலாம். தேவையில்லாமல் இவற்றை பயன்படுத்தக்கூடாது. 9. மற்றொரு கட்சி தலைவரையோ, வேட்பாளரையோ அவமதிக்கும் வகையில் கொடும்பாவி எரித்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. 10. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பிரசார கூட்டம் நடத்தவேண்டும். இதில் தேர்தல் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். 11. அரசு சார்ந்த இடங்களை கட்சி சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது.  12. தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது முதல், அமைச்சர்களோ, அதிகாரிகளோ, அவர்களுடைய பிரதிநிதிகளோ, அரசு உதவிகளையோ, மானியங்களையோ வழங்ககூடாது. 13. உள்ளாட்சி பிரசாரத்துக்கு செல்லும் அமைச்சர்கள் அரசு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. 14. அரசு திட்டங்களை தொடங்குதல், சாலை, குடிnullர் வசதி, தெருவிளக்கு அமைத்தல் போன்ற பணிகளை செய்யக்கூடாது.  15. ஓட்டுப் போட பணம் கொடுப்பது, வாக்காளர்களை திரட்டுவது, ஆள் மாறாட்டம் செய்து ஓட்டுப் போடுவது போன்றவை கடும் குற்றமாக கருதப்படும். 16. ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள், வாங்குபவர்கள் இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 17. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 வருடம் வரை ஜெயில் தண்டனை கிடைக்கும். 18. வாக்கு சாவடியில் இருந்து 100 அடி தூரத்துக்குள் நின்று ஆதரவு கேட்பதும், வாக்காளர்களை ஓட்டுப்போட வாகனங்களில் அழைத்து செல்வதும் ஊழல் குற்றமாக கருதப்படும். 19. ஓட்டு போடும் வாக்காளர்கள், அனுமதி பெற்ற தேர்தல் ஏஜெண்டுகள், தவிர அரசியல் பிரமுகர்கள் யாரும் ஓட்டுச் சாவடிக்குள் நுழையக்கூடாது.   20. ஓட்டு போடுவதற்கான புகைப்படத்துடன் கூடிய nullத்சிலிப்களை அரசியல் கட்சிகள் கொடுக்ககூடாது. 21. மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் ஊழியர்களே ஒரு வாரத்துக்கு முன்பு வீடு வீடாக சென்று nullத் சிலிப்களை கொடுப்பார்கள். 22. வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.23. தேர்தல் ஆணையத்தின் விதிகளை கடைபிடிக்காத வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும். 24. வாக்காளர் பட்டியலில் பெயர் படம் இருந்தாலும், மத்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள வாக்காளர் அடையாள அட்டை, அல்லது மாநில தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளில் ஒன்றும் இருந்தால் மட்டுமே ஓட்டு போட முடியும். 

இவ்வாறு தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்