முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூத்த வழக்கறிஞர் பிராந்த் பூஷணை சரமாரியாக தாக்கிய 2 இளைஞர்கள்

வியாழக்கிழமை, 13 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,அக்.- 13 - பிரபல மூத்த வழக்கறிஞர் பிராந்த் பூஷணை சுப்ரீம்கோர்ட்டு வளாகத்தில் வைத்தே 2 இளைஞர்கள் சரமாரியாக அடித்தும் உதைத்தும் தாக்கினர். தாக்கிய 2 இளைஞர்களில் ஒருவர் பிடிபட்டார். மற்றொரு வாலிபர் தப்பியோடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார். 

முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் சுப்ரீம்கோர்ட்டு மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷணின் மகன் பிரசாந்த் பூஷண். இவரும் சுப்ரீம்கோர்ட்டு வழக்கறிஞராக இருக்கிறார். மேலும் நாட்டில் ஊழலை ஒழிக்க லோக்பால் வரைவு மசோதா தயாரிக்க அமைக்கப்பட்ட அண்ணாஹசாரே குழுவிலும் பிரசாந்த் பூஷண் உறுப்பினராக இருக்கிறார். இவர் பல பொதுக்கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டு பேசுவார். உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரசாந்த் பூஷண்,காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தன்னுடைய கருத்தை தெரிவித்தார். அதாவது இந்தியாவுடன் காஷ்மீர் மக்கள் சேர்ந்து வாழ விரும்பாவிட்டால் அவர்களுக்கு சுயாட்சியோ அல்லது தனிநாடோ கொடுத்துவிடலாம் என்று பிரசாந்த் பூஷண் கருத்து தெரிவித்தார். இதற்கு ஸ்ரீராம் சேனா என்ற அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று சுப்ரீம்கோர்ட்டுக்கு வந்த பிரசாந்த் பூஷண், தனது அறையில் ஒரு டி.வி.க்கு பேட்டி அளித்துக்கொண்டியிருந்தார். அப்போது 2 இளைஞர்கள் திடீரென்று அந்த அறைக்குள் புகுந்தனர். புகுந்ததுதான் தாமதம், பிராந்த் பூஷணை இருக்கையில் இருந்து இழுத்துப்போட்டு சரமாரியாக அடித்து உதைத்தனர். கீழே தள்ளிவிட்டனர். அவர் கீழே விழுந்ததும் உதைத்தனர். இதில் அவரது சட்டை கிழிந்தது அல்லாமல் உடல் வலியும் ஏற்பட்டது. வலி தாங்காமல் அலறினார். இந்த சத்தம் கேட்ட இதர வழக்கறிஞர்கள் ஓடிவந்து அடிப்பதை தடுத்ததோடு அந்த 2 இளைஞர்களில் ஒருவரையும் பிடித்து தர்ம அடி திரும்பக்கொடுத்தனர். ஆனால் ஒரு மற்றொரு இளைஞர் தப்பியோடிவிட்டார். பிடிபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது நாங்கள் பகத்சிங்,கிராந்தி சேனா அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறினார். மேலும் அவரிடமிருந்து ஸ்ரீராம் சேனாஅமைப்பின் நோட்டீசுகளும் இருந்தன.  இந்த சம்பவம் நடந்தபோது பிராந்த் பூஷண் பேட்டி அளித்துக்கொண்டியிருந்ததால் அனைத்தும் வீடியோவில் பதிவாகி உள்ளது. தாக்குதலில் காயம் அடைந்த பிராந்த் பூஷண் டெல்லியில் உள்ள் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய இளைஞரையும் பிடிக்க தேடி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்