முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலெக்டர் சகாயம் வாக்கு எண்ணும் மையங்களில் ஆய்வு

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,அக்.22 - மதுரை மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடந்துமுடிந்த உள்ளாட்சித்தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணி அளவில் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற 20 மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும்,  மாவட்ட கலெக்டர் சகாயம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மதுரை மாவட்டத்திலுள்ள வாக்கு எண்ணும் மையங்களான ஊமச்சிக்குளத்திலுள்ள யாதாவ கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரிலுள்ள இரண்டு மண்டலங்களின் வாக்கு எண்ணும் மையங்கள், தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்லூரி, திருப்பரங்குன்றம், திருநகரிலுள்ள சீதாலெட்சுமி மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருமங்கலத்தில் பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கள்ளிக்குடியில் கே.வேளக்குளம் அரசுமேல்நிலைப்பள்ளி, டி.கல்லுப்பட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் காந்தி நினைவு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சேடப்பட்டியில் எஸ்.கோட்டைப்பட்டிலுள்ள பராசக்தி மேல்ப்பள்ளி, உசிலம்பட்டியில் டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாளியில் வாக்குச்சீட்டுக்களை போலீஸ் பாதுகாப்புடன் நுண்ணியல் பார்வையாளர்கள் மூலம் எடுத்து சென்று வாக்கு எண்ணப்பட்டத்தையும், கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்கு எண்ணும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டர் சகாயம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago