முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகை - பணத்தை அபகரித்த ஜோதிடர்கள் கைது

புதன்கிழமை, 2 நவம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

ஏரல், நவ.2- அந்தமானுக்கு சென்ற தமிழக ஜோதிடர்கள் இருவர் பரிகாரம் செய்வதாக கூறி அங்குள்ள மூன்று பேரிடம் 30 பவுன் நகை, மற்றும் ரூ.2 லட்சத்தை வாங்கி மோசடி செய்துள்ளனர். இதையடுத்து அந்த இரண்டு பேரும் கைது செய்து அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

ஏரல் அருகில் உள்ள மகாகணபதியார் புரத்தைச் சேர்ந்த அழகிரி மகன் கணேசன், வரதராஜன் மகன் வேல்முருகன் ஆகிய இருவரும் ஜோதிடம் பார்த்து வந்தனர். இவர்களிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு தோஷங்கள், பரிகாரங்களுக்கு பரிகாரம் செய்தவதாக கூறி பணம் வசூலிப்பதை வழக்கமாக செய்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் சில மாதங்களும் முன்பு வேல்முருகன், கணேசன் ஆகிய இருவரும் அந்தமான் சென்றனர். அங்கு தெற்கு அந்தமான் கோப்டவுன் பகுதியில் வசித்து வரும் கண்ணன், காளிமுத்து மற்றும் மணிகன்டன் ஆகியோர் வீட்டிற்கு சென்று ஜோதிடம் பார்த்தனர். இதில் அவர்களுக்கு பரிகார பூஜை செய்யவேண்டும் என்று கூறி தலா 25 ஆயிரம் வசூலித்தனர். பின்னர் இங்கு மட்டும் பூஜை செய்தால் போதாது எங்களது சொந்த ஊரில் உள்ள கோவிலில் பூஜைசெய்யவேண்டும் என்று கூறி நகைகளை கேட்டனர். கண்ணனிடம் 10 பவுன் நகை, காளிமுத்துவிடம் 15 பவுன் நகை, மணிகன்டனிடம் 5 பவுன் என மொத்தம் 30 பவுன் நகைகளையும் ரொக்கம் ரூ.2 லட்சத்தையும் வாங்கிக்கொண்டு தமிழகம் வந்தனர்.

பூஜை முடிந்த பின்னர் நகைகளை திருப்பி தருவதாக கூறி ஜோதிடர்கள் கூறினர். ஆனால் பல மாதங்கள் ஆகியும் நகைகளை திருப்பி தரவில்லை. அவர்கள் மீது அந்தமான் பாம்பிளாஸ்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். 

இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் தமிழகத்தில் வீட்டில் இருந்து கணேசன், வேல்முருகன் ஆகிய இருவரையும் கைது ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் இருந்து நகை, பணம் மீட்கப்பட்டது. அவர்கள் இரண்டு பேரும் அந்தமானுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago