முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலோர காவல் படைக்கு சிறப்பு வாகனங்கள்: முதல்வர்

புதன்கிழமை, 16 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, நவ.17 - கடலோர காவல் பாதுகாப்புப் படைக்கு துரிதமாக செல்லக்கூடிய சிறப்பு வாகனங்களை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுத்தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை 1076 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளை பாதுகாக்கும் வண்ணம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவால் 1994 ஆம் ஆண்டு கடலோர காவல்படை ஏற்படுத்தப்பட்டது.

இந்தக் கடலோர காவல்படை, கடலோரப் பாதுகாப்பு குறித்த நுண்ணறிவுத் தகவல்களைப் பெறுவதில் கடற்படை, உள்ளூர் காவல்துறை, மீன்வளத்துறை, சுங்கத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுடன், ஒருங்கிணைந்து செயல்பட்டு, கடற்கரை ஓரம் நடைபெறுகின்ற அனைத்து சமூக விரோத செயல்களையும் தடுத்து நிறுத்தும் வகையில் திறம்பட செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான கடற்கரைப் பகுதிகளுக்கு  அணுகத்தக்க சாலைகள் இல்லை என்பதையும், தற்போது இப்படையிடம் உள்ள வாகனங்கள் மூலம் மணற்பாங்கான கடற்பகுதிக்கு துரிதமாக  செல்ல இயலவில்லை என்பதையும் கருத்தில் கொண்டு மணற்பாங்கான கடற்பகுதிகளைப் பாதுகாக்க, கடலோர காவல் படைக்கு அனைத்து வகையான பாதைகளிலும் துரிதமாக செல்லக்கூடிய சிறப்பு வாகனங்களை கடலோர பாதுகாப்புப் படையை சேர்ந்த 12 காவல் நிலையங்களுக்கும், தலா ஒரு மோட்டார் சைக்கிள்  மற்றும் ஒரு ஜீப் அளிக்க தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதனால், அரசுக்கு 1 கோடியே 56 லட்சம் ரூபாய் தொடரா செலவினமும், 48 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய், ஆண்டொன்றுக்கு   தொடர் செலவினமும் ஏற்படும்.இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony