ராமேஸ்வரம் கோவிலுக்குள் மழைநீர்: பக்தர்கள் அவதி

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

ராமேஸ்வரம், நவ.- 21 - ராமேஸ்வரத்தில் பெய்த மழையால் ராமநாத சுவாமி கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் மழைநீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதில் கடலோர மாவட்டங்கள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டன. ராமேஸ்வரத்திலும் தொடர்ந்து பெய்த கன மழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. ராமேஸ்வரம் துறைமுகம், சந்தனமாரியம்மன் கோவில்தெரு ஆகிய பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இந்த மழைநீர் ராமநாதசுவாமி திருக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்திலும் புகுந்தது. முழங்கால் அளவு தேங்கி நின்ற மழைநீரால் பக்தர்கள் நடந்து செல்ல சிரமமடைந்தனர்.  நகராட்சி கமிஷனர் ரத்னவேல் தலைமையில் ஊழியர்கள் நகரின் தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றினர். ராமேஸ்வரத்தின் சுற்றுப்புறங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்தது.  

இதை ஷேர் செய்திடுங்கள்: