முக்கிய செய்திகள்

சபரிமலை வருமானம் ரூ.3 கோடியை தாண்டியது

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம், நவ.- 21 - சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைதிறந்த 3-வது நாட்களிலேயே வருமானம் ரூ.3 கோடியை தாண்டியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள  சபரிமலை உலகப் புகழ்பெற்ற ஐயப்பன் திருத்தலம்.  இங்கு எழுந்தருளியுள்ள தர்மசாஸ்தாவைக்  காண இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் மற்றும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிந்து கிளம்பிவிடுகிறார்கள். சிறிதுகாலமாவது விரதம் இருந்து பக்தர்கள் ஐயப்பனை காண செல்வது வழக்கம். ஆனால் இம்முறை முன் எப்போதும் இல்லாத அளவில் கார்த்திகை மாதம் ஆரம்பித்ததில் இருந்தே சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். இந்த நீண்ட வரிசை 18 ம் படியில் இருந்து சரங்குத்தி வரை நீள்கிறது. அதேபோல சபரிமலையில் வழங்கப்படும் அரவணை, அப்பம் போன்ற பிரசாத பொருட்களை வாங்குவதற்கும் நீண்ட வரிசை காணப்படுகிறது. அதேபோல  சபரிமலை கோவிலில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வருமானமும் அதிகரித்துள்ளது. நடை திறக்கப்பட்ட 3 நாட்களிலேயே கோவில் வருமானம் 3 கோடியை தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: