முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் ஜெய்யுடன் இனி நடிக்க மாட்டேன் நடிகை அஞ்சலி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2011      சினிமா
Image Unavailable

சென்னை, நவ.- 22 - நடிகர் ஜெய்யுடன் இனி நடிக்க மாட்டேன் என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார். நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாக கிசுகிசு பரவியது. இருவரும் தனிமையில் சந்திப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த கிசு கிசுவை ஜெய் பரப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் அஞ்சலியை ஒருதலையாக காதலிப்பதாகவும், அஞ்சலி அக்காதலை ஏற்கவில்லை என்றும், எனவே இதுபோல் வதந்திகளை பரப்புகிறார் என்றும் இருவருக்கும் நெருக்கமான இயக்குனர் ஒருவர் தெரிவித்தார். காதல் கிசுகிசு பரப்புவதால் இனிமேல் ஜெய்யுடன் நடிப்பதில்லை என்று அஞ்சலி முடிவு செய்துள்ளார். இதுகுறித்து நேற்று நடிகை அஞ்சலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அங்காடித் தெரு படம் மூலம் எனக்கொரு அங்கீகாரத்தை கொடுத்த ரசிகர், ரசிகைகள் மற்றும் கலையுலக நண்பர்களுக்கும் எங்கேயும், எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன். வாழ்க்கையில் ஜெயிக்க போராடித்தான் ஆக வேண்டும். 5 ஆண்டுகள் எனது போராட்டத்துக்கு பிறகு இன்று நல்ல நடிகை என்ற அந்தஸ்தில் கொஞ்சம் வளர்ந்திருக்கிறேன். இப்போது தான் நல்ல நல்ல படங்கள் எனக்கு வருகிறது. அந்த மகிழ்ச்சியை கெடுப்பது போன்று ஒரு நடிகருடன் காதல், விரைவில் திருமணம் என்று பத்திரிகைகளில் வருகிற செய்திகளை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். என்னுடன் இணைந்து கிசுகிசுக்கப்படும் நடிகருடன் இணைந்து ஒரே படத்தில்தான் நடித்தேன். அதற்குப் பிறகு வந்த கிசுகிசுக்களால் இனி அந்த நடிகருடன் நடிப்பதில்லை என்று முடிவெடுத்து சில படங்களை தவிர்த்தேன். நான் இன்னும் வளர வேண்டும். நல்ல நடிகை என்று விருதுகள் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறேன். எனது இந்த ஆசைகளுக்கு உங்களிடமிருந்து வாழ்த்துக்களையும், ஆதரவையும் வேண்டுகிறேன். எனக்கு இதுவரை யாருடனும் காதல் இல்லை. இதை பகீரங்கமாக அறிவிக்கிறேன். தயவு செய்து மேற்கொண்டு அந்த நடிகருடன் இணைத்து வரும் கிசுகிசுக்களை நம்பாதீர்கள். இவ்வாறு நடிகை அஞ்சலி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago