முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாஜ்மஹாலுக்கு ஆபத்து இல்லை பார்லி.யில் அமைச்சர் தகவல்

புதன்கிழமை, 23 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.- 23 - உலக அதிசயங்களில் ஒன்றான  தாஜ்மஹாலுக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று  பாராளுமன்றத்தில் அமைச்சர் குமாரி ஷெல்ஜா தெரிவித்தார். பாராளுமன்றத்தின் லோக் சபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மத்திய கலாச்சார துறை அமைச்சர் குமாரி ஷெல்ஜா கேள்வி  ஒன்றுக்கு எழுத்து மூலமாக பதில் அளித்தார். உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும்  17-ம் நாற்றாண்டை சேர்ந்த அந்த காதல் நினைவுச்சின்னம்  முழுக்க முழுக்க பாதுகாப்பாக உள்ளது என்று அதை ஆய்வு செய்த முன்னணி வல்லுனர்கள் உறுதிபட கூறியுள்ளனர் என்றும்  அவர் கூறினார். முகலாய மன்னர் ஷாஜகானால் கட்டப்பட்ட அந்த  காதல் நினைவுச்சின்னம்  இடிந்து விடும் நிலையில் இருக்கிறது என்று ஊடகங்களில் வெளி வந்துள்ள செய்திகளுக்கு விஞ்ஞானபூர்வமான அடிப்படை எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். தாஜ்மஹாலை இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை, இந்திய மற்றும் மத்திய  கட்டிட ஆராய்ச்சி நிலையம் ஆகியவை  தாஜ்மஹாலை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்துள்ளன என்றும்  அந்த ஆய்வுகளின்படி தாஜ்மஹாலும் அதில் உள்ள 4 கோபுரங்களும்  பாதுகாப்பாகவும் ஸ்திரமாகவும் உள்ளன என்றும் தெரியவந்துள்ளது என்றும்  அமைச்சர் ஷெல்ஜா கூறினார்.

தாஜ்மஹாலை பாதுகாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும்  தேவையை பொறுத்து இந்த பணி தொடரும் என்றும் அதற்கான நிதி ஆதாரங்களும் உள்ளன என்றும் அவர் கூறினார். அத்யாவசிய ஆய்வுகள் மூலம் தாஜ்மஹால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று  அவர் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்