முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை பெரியாறு உரிமையை மீட்போம்: சீமான்

ஞாயிற்றுக்கிழமை, 18 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

தேனி. டிச.18 - முல்லை-பெரியாறு அணை உரிமையை மீட்போம் என்று தேனி பகவதி அம்மன் கோவில் திடலில் நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பேசினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு சீமான் பேசுகையில், முல்லை-பெரியாறு அணை பலமின்றி காணப்படுவதாக குற்றச்சாட்டு ஏற்பட்டபோது வல்லுநர்கள் குழு இந்த அணை பாதுகாப்பாக இருப்பதை கூறியும் கூட கேரள அரசு வேண்டுமென்று அச்சம் தெரிவித்தது.  பலகோடி ரூபாய் செலவில் அணை பலப்படுத்தப்பட்டது.  நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அணைக்கு சேதம் ஏற்படாத வகையில் தொழில்நுட்பத்தில் அணையை பலப்படுத்தினார்கள்.  ஆனால் கேரள அரசானது பிடிவாதமாக முல்லை-பெரியாறு அணை பலம் இழந்து விட்டதாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றது.

 

ஆனால் உச்சநீதி மன்றம் 142 அடி உயர்த்தலாம் என்று தீர்ப்பு கூறியும் அதன்படி செயல்படவில்லை.  அணையை உடைப்பதாக கூறிவரும் கேரள அரசை கண்டித்து முல்லை-பெரியாறு அணை உரிமையை மீட்போம்.  கடந்த 15 நாட்களாக தென்பகுதிகளில் விவசாயிகளும் பொதுமக்களும் தொழிலாளர்களும் உண்ணாவிரதம், கண்டன போராட்டம், முற்றுகை போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  இந்த போராட்டங்களை கண்டுகொள்ளாமல் கேரள அரசு உள்ளது.  

 

உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி அணை 142 அடி உயரம் ஏற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று பேசினார்.  போராட்டத்தில் பேராசிரியர் தீரன், சாகுல்ஹமீது, சந்திரசேகர், ஐய்யநாதன், பால்நியுமன், செல்வபாரதி, மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிகுமரன், தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுருதி.முருகன் உட்பட மற்றும் பலர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony