முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூரில் கடலோரப் பகுதிகளில் புகுந்தது கடல் நீர்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

கடலூர், டிச.28 - கடலூரில் இரவு 10 மணி அளவில் ராட்சத அலைகள் எழுந்தன. 10 அடி உயரத்திற்கு எழுந்த அலை பேரிரைச்சலுடன் ஊருக்குள் புகுந்தது. இதனால் தேவனாம்பட்டினம், சிலவர் பீச் மற்றும் குழந்தைகள் பூங்கா ஆகியவை கடல்நீரில் மூழ்கின. கரையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான மீன்படி படகுகளை கடல்நீர் இழுத்துச்சென்றது. ராட்சத அலைகளால் ஏராளமான படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. ஊருக்குள் கடல்நீர் புகுந்ததால் பொதுமக்கள் மத்தியில் சுனாமி பீதி ஏற்பட்டு அச்சமடைந்த அவர்கள் தங்களது குழந்தைகளை கூட்டிக்கொண்டு மேடான பகுதி நோக்கி அலறியடித்து ஓடினர். இரவு முழுவதும் தூங்காமல் அச்சத்துடன் விழித்திருந்தனர்.தகவலறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல்கூறி பாதுகாப்பு அளித்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கன்னியாகுமரியில் கடல் சீற்றமின்றி அமைதியாக காணப்பட்டது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் பீதியுடன் பார்த்தனர். புதுவை கடலில் அலைகள் சீற்றத்துடன் உயரமாக எழும்பி கரையை நோக்கி வந்து பாறைகளை நனைத்தது. போலீசார் கடற்கரைக்கு விரைந்து சென்று சுற்றுலா பயணிகளை கலைந்து செல்லும் படி கேட்டுக்கொண்டனர். புதுவையில் சிற்சில மூனவகிராமங்களில் கடல் நீர் உட்புகுந்தது. இதனால் மீனவர்கள் விடியவிடிய தூங்காமல் கண்விழித்தபடி இருந்தனர். சின்ன முதியார் சாவடி என்ற மீனவ கிராமத்தில் கடல்நீர் புகுந்ததால் அப்பகுதியில் உள்ள இருவருடைய மாடி வீடுகள் இடிந்ததுடன் மேலும் 5 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் எண்ணூர், திருவெற்றியூர் ஆகிய பகுதிகளில் ஊருக்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் 10 வீடுகளுக்குள் கடல்நீராக காட்சியளித்தது.கடலோரப்பகுதிகளில் நின்றிருந்த படகுகளை அலைகள் இழுத்துச்சென்றது. இதனை அதிகாரிகள் கிரேன் மூலம் அகற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்