சட்ட மன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு: பா.ஜ.

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

ஜம்மு,டிச.28 - பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்கள் சமமாக இடம் பெறும் வகையில் இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  நாட்டில் பாராளுமன்றமும் சட்டமன்றமும் முடிவு எடுக்கும் சபைகளாகும். இந்த சபைகளில் பெண்களுக்கு சமமான இடஒதுக்கீடு கிடைக்க இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் பிரிவினர் மாநாட்டிற்கு பிறகு தலைவர் சகினோ பானோ நேற்று ஜம்முவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார். அரசியலிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கட்சியின் மகளிர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் பானோ தெரிவித்தார். பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. மனது ரீதியாகவும் உடம்பு ரீதியாகவும் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள் இமாசலப்பிரதேச மாநில பா.ஜ. பெண் எம்.எல்.ஏ. உர்மிளா தாகூர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார். அமைப்பு ரீதியாக பெண்களுக்கு 36 சதவீத ஒதுக்கீட்டை பாரதிய ஜனதா வழங்கியுள்ளது. அரசியலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் கொண்டுவந்தால் அதை பாரதிய கண்மூடிக்கொண்டு ஆதரிக்கும் என்று இமாசலப்பிரதேச மாநில பாரதிய ஜனதா தலைவர் ஷம்ஷெர் சிங் பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: