திருப்பதி கோவிலில் 2.5 கிலோ மீட்டர் தூரம் குவிந்த பக்தர்கள்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை, ஜன. - 2 - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று அதிகாலை புத்தாண்டு தரிசனம் தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பாபிராஜு, தேவஸ்தான செயல் அலுவலர் சுப்பிரமணியம், இணை அதிகாரி சீனிவாசராவ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாது பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் நின்று சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது. வைகுண்டம் பிளாக்கில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வழிந்தன. புத்தாண்டில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக 5 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் இருந்தன.
 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: