முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை புவனேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு

வியாழக்கிழமை, 5 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.- 5 - சின்னத்திரை நடிகை புவனேஸ்வரி கே.கே.நகரை சேர்ந்த குருநாதன் என்பவரிடம் வாங்கிய பணத்தை தராமல் ஏமாற்றி வருவதால், அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டது. சென்னை கே.கே.நகரை சேர்ந்த குருநாதன் என்பவர் சின்னத்திரை நடிகை புவனேஸ்வரி மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- அஷ்ட லஷ்மி பிலிம்ஸ் உரிமையாளர் சம்பூரணம் என்பவர் என்னுடைய நண்பர். அவரால் தான் நடிகை புவனேஸ்வரி எனக்கு அறிமுகமானார். இந்த வியாபாரத்தால் என்னிடம் அதிக பணம் புழங்குவதை நடிகை கண்டுகொண்டார். அவர் என்னிடத்தில் நான் ஒரு புதிய தொலைக்காட்சி தொடர் எடுக்க போகிறேன். எனக்கு பணம் தேவைப்படுகிறது என கூறி ரூ.1 1/2 கோடியை என்னிடத்தில் கடனாக பெற்றுக்கொண்டார். அன்று முதல் அவர் என்னிடத்தில் பேசுவதும் இல்லை. எந்த தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை. நான்  கொடுத்த பணத்தை புவனேஸ்வரியிடம் திருப்பி கேட்டதால் என்னுடைய குடும்ப உறுப்பினர்களை சிலர் மிரட்டி வருகின்றனர். நடிகை புவனேஸ்வரி அரசியல் செல்வாக்கு மிக்கவர். சட்ட விரோதமாக எனக்கு பணம் தராமல் இருக்கிறார். இது சம்மந்தமாக கடந்த 29.8.2011 அன்று கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆகையால் நான் தந்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த மனு மீதான வழக்கு விசாரணை நீதிபதி மதிவாணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி நடிகை மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரிந்தால் சம்மந்தப்பட்ட மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் 6 வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony