எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிட்னி, ஜன. - 9 - இந்திய பேட்ஸ்மேன்களை குறைத்து மதிப்பிட வேண்டாம், அடுத்து நடக்க இருக்கும் டெஸ்டுகளில் சிறப்பாக ஆடி ரன்னை எடுப்பார்கள் என்று கேப்டன் தோனி கருத்து தெரிவித்து இருக்கிறார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மெல்போர்ன் மற்றும் சிட்னி நகர்களில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டி நடைபெற் றது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற தொடரில் 2- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. ஆஸி. அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்டில் தோல்வி அடைந் ததைத் தொடர்ந்து இந்திய பேட்ஸ்மேன்கள் மீது பல்வேறு தரப்பிலும் இருந்து விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியிடம் ஏ. ஏ.பி. செய்தி நிறுவனம் சார்பில் நிருபர்கள் கேட்ட போது, அவர் அத ற்கு மேற்கண்டவாறு பதில் அளித்தார். இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங் வரிசை பலமானது. இந் திய அணியில் மட்டும் தான் 7 பேட்ஸ்மேன்கள் உள்ளனர். எனவே தான் இந்திய அணி விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான வி.வி. எஸ். லக்ஷ்மண் சிட்னி டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 66 ரன் எடுத்தார். மற்ற 3 இன்னிங்சில் அவர் மோசமாக ஆடினார். எனவே அவர் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்.
மற்றொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுல் டிராவிட் இங்கிலா ந்து தொடரில் சிறப்பாக ஆடினார். அவர் அடித்த 3 சதம் இந்திய அணியின் மானத்தைக் காப்பாற்றியது. ஆனால் அவர் இந்தத் தொடரில் சரி யாக ஆடவில்லை. அவரது ஆட்டத்தில் உதறலைக் காண முடிகிறது. நட்சத்திர வீரரான டெண்டுல்கர் இந்தத் தொடரில் நன்கு ஆடி வருகிறார். இருந்த போதிலும், அவரால் நிலைத்து நின்று ஆடி சதம் அடிக்க முடியவில்லை. அவரது 100 - வது சதத்தை உலகமே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. துவக்க வீரர்களான சேவாக்கும், காம்பீரும் இந்தத் தொடரில் நல்ல துவக்கத்தை இதுவரை அளிக்கவில்லை. 33 வயதான சேவாக்கும் 30 வயதான காம்பீரும் நன்கு ஆடினால் மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆட ஏதுவாக இருக்கும். இது குறித்து கேப்டன் தோனியிடம் கேட்ட போது, இந்திய அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் நல்ல அனுபவம் மிக்கவர்கள். தற்போதைய நிலையில் அவர்கள் சிறந்த வீரர்களாக உள்ளனர். அவர்களுக்கு நன்றாக ஆடி வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் அவர்க ள் ரசித்து ஆட வேண்டும். அடுத்து நடக்க இருக்கும் டெஸ்டுகளில் அவர்கள் நன்கு ஆடி அதிக ரன்னைக் குவிப்பார்கள் என்று அவர் நம்பி க்கை தெரிவித்தார்.
இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான மைக்கேல் கிளார் க்கிடம் கேட்ட போது, இந்திய அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளநர். அவர்கள் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்னை எடுத்துள்ளார்க ள். அதிக சதங்களை அடித்துள்ளார்கள். ஆனால் அவர்கள் தற்போது நடுக்கத்துடன் உள்ளனர். அவர்களது வேட்கை குறையவில்லை. இந்தி ய பேட்ஸ்மேன்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்கள் சிறந்த வீரர்கள் என்பகை நாங்கள் அறிவோம். எங்களது கவனம் முழுவ தும் பெர்த் டெஸ்டில் வெற்றி பெறுவதே குறித்தே உள்ளது என்றார் அவர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025