முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை பெரியாறு அணைக்காக போராட்டம்: நித்யானந்தா

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, ஜன.11 - முல்லை பெரியாறு அணை பிரச்சினைக்காக விரைவில் போராடுவேன் என்று மதுரையில் நித்யானந்தா கூறினார். மதுரை அண்ணாநகர் வண்டியூர் மெயின்ரோட்டில் நேற்று காலை நித்யானந்தா தியாக பீடம் திறப்புவிழா நடந்தது.  நிகழ்ச்சிக்கு மதுரை ஆதீனம் தலைமை தாங்கினார். நித்யானந்தா ஆசிரம கொடியை திறந்து வைத்து ஆன்மீக உரையாற்றினார்.  பின்னர் நிருபர்களுக்கு நித்யானந்தா பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:

தியாக பீடம் மதுரை நகர மக்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது.  தியான பீடத்தில் யோகா, தியானம்,  மனசம்பந்தமான வகுப்புகள் நடத்தப்படும். விரைவில் திருப்பரங்குன்றத்தில் நித்யானந்தா ஆசிரம் தொடங்கப்படும். மேலும் அங்கு 100 படுக்கைகள் கொண்ட இலவச ஆஸ்பத்திரியும் தொடங்கப்படும்.  இந்த மருத்துவமனை ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்.  தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், புதுச்சேரி பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எங்களது ஆசிரமம் சார்பில் ரூ.96 லட்சம் நிவாரண தொகையாக வழங்கி உள்ளோம். மேலும் நானே நேரடியாக சென்று களப்பணியில் ஈடுபட்டேன். 151 நாடுகளில் தீட்சதம் பெற்ற ஒருகோடி பக்தர்கள் உள்ளனர். தொடர்ந்து எங்களது ஆசிரம பக்தர்கள் அதிகரித்து வருகிறார்கள். 1,500 சன்னியாசிகள் ஆசிரமத்தில் உள்ளனர். நான் ஆசிரமத்தில் இருந்தே பொது பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். இரு மாநில பிரச்சனை  என்றாலே அந்த பிரச்சினை தேசியமயமாக்கப்பட வேண்டும். 

ஏனென்றால் உணர்வுகளை தூண்டி நாட்டை துண்டாக்க இடம் கொடுக்கக் கூடாது. முல்லை பெரியாறு பிரச்சினையில் நான் இது வரை போராட முடிவு செய்யாமல் இருந்தேன். விரைவில் முல்லை பெரியாறு அணைக்காக போராடுவேன். அது எந்த மாதிரியான போராட்டம் என்று பின்னர் அறிவிப்பேன்.  இவ்வாறு அவர் கூறினார். 

மதுரை ஆதீனம் கூறுகையில், நித்யானந்தாவின் ஆன்மீக பணிகள் பாராட்டுக்குரியது என்று கூறினார். பின்னர் நித்யானந்தா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago