Idhayam Matrimony

இமாசல பிரதேச பேருந்து விபத்து: பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார் பிரதமர்

சனிக்கிழமை, 10 ஜனவரி 2026      இந்தியா
Modi-1 2023 04 03

சிம்லா, இமாசல பிரதேசத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் அளிக்கப்படும் என பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.

இமாசல பிரதேசத்தின் சிர்மாவுர் மாவட்டத்தில் சிம்லா நகரில் இருந்து குப்வி நகர் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் பலர் பலியானார்கள். பயணிகள் 30-க்கும் மேற்பட்டோருக்கு காயமும் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பேருந்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்து உள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், இழப்பீடும் அறிவித்து உள்ளார். இதன்படி பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து