Idhayam Matrimony

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக காங்., தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு

வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2026      தமிழகம்
Rahul 2024-12-03

சென்னை, தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஓரிரு மாதங்களில் தேர்தல் அறிவிப்புகள் வெளியாகவுள்ளன. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக காங்கிரஸின் ஒரு தரப்பினர் தி.மு.க.வுடனும், மற்றொரு தரப்பினர் த.வெ.க.வுடனும் கூட்டணி வைக்க வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசை விமர்சித்தும், த.வெ.க.வுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் பதிவிட்டு வருவதால் தமிழக அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் தரப்பில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், டெல்லியில் வருகின்ற  18 மற்றும் 19 ஆகிய இரண்டு நாள்கள் தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தவுள்ளார். 

இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாருடன் கூட்டணி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு ஆகிய இரண்டு விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர். இந்த ஆலோசனைக்கு பிறகு த.வெ.க.வுடன் கூட்டணியா? தி.மு.க.வுடன் கூட்டணியா? என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து