Idhayam Matrimony

அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது: மம்தா பானர்ஜி

சனிக்கிழமை, 10 ஜனவரி 2026      இந்தியா
Mamta 2024-12-07

கொல்கத்தா, நிலக்கரி ஊழல் பணம் தொடர்பாக அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை கொண்ட பென் டிரைவ் என்னிடம் உள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் ஐ.டி. பிரிவுத் தலைவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த வியாழக்கிழமை அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனைகளை கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து கொல்கத்தாவில் மாபெரும் பேரணி நடத்தினார். இதன் பின்னர் பேசிய அவர், “நிலக்கரி ஊழல் பணம் டெல்லியில் உள்ள தலைவர்களிடம் சென்று சேர்ந்துள்ளது. என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. தேவைப்பட்டால் அதை நான் வெளியிடுவேன்.

நிலக்கரி ஊழல் பணம் பா.ஜ.க.வை சேர்ந்த சுவேந்து அதிகாரி மூலம் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு போயிருக்கிறது. அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை கொண்ட பென் டிரைவ் என்னிடம் உள்ளது. நான் வழக்கமாக எதிர்வினை ஆற்றுவதில்லை. ஆனால் யாராவது என்னைத் தூண்டிவிட்டால், நான் அவர்களை விடமாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து