Idhayam Matrimony

தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்

சனிக்கிழமை, 10 ஜனவரி 2026      தமிழகம்
Chennai-high-court2

சென்னை, தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வக்பு வாரியத்துக்கு, தலைவர் உள்பட 10 உறுப்பினர்கள் நியமனம் செய்து, கடந்த ஆண்டு நவம்பர் 28-ந்தேதி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்தும், மத்திய அரசின் ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை சட்டத்தை முறையாக பின்பற்றாமல் வாரிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறி வக்கீல் சவுகத் அலி முகமது என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடந்துள்ளார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில், “சட்ட விதிகளின்படி, வக்பு வாரியத்தில் மொத்தம் உள்ள உறுப்பினர்களில் 2 பேர் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும். மாநில பார் கவுன்சிலில் இருந்து ஒரு உறுப்பினர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் இதை அரசு பின்பற்றவில்லை” என வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கிற்கு தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதுவரை வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதிக்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து