முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோயிலில் ரத சப்தமி விழா

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

நகரி, ஜன. 22 - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் ரத சப்தமி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் வருகிற 30 ம் தேதி ரத சப்தமி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 30 ம் தேதி காலை சூரிய பிரபை வாகனத்திலும், பின்னர் சின்ன சேஷ வாகனத்திலும், கருட வாகனத்திலும், அனுமந்த வாகனத்திலும், கல்ப விருட்ச வாகனத்திலும், சர்வ பூபால வாகனத்திலும், சந்திர பிரபை வாகனத்திலும் ஏழுமலையான் உலா வருகிறார். ஒரே நாளில் ஏழு வாகனங்களிலும் ஒன்றன்பின் ஒன்றாக ஏழுமலையான் வருவதால் இதை காண ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதனால் இத்திருநாளில் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தேவஸ்தான அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். திருப்பதி கோயிலில் வழங்கப்படும் ஏழுமலையானின் 10 கிராம் தங்க டாலரின் விலை நேற்று ரூ. 300 உயர்த்தப்பட்டு, ரூ. 30 ஆயிரத்து 195 க்கு விற்கப்படுகிறது. இதே போல் 5 கிராம் டாலர் ரூ. 150 உயர்த்தப்பட்டு ரூ. 15 ஆயிரத்து 285 க்கும், 2 கிராம் டாலர் ரூ. 6 ஆயிரத்து 25 க்கும் விற்கப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயருவதால் இந்த விலையேற்றத்தை செய்துள்ளோம் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago