செல்போன் விற்பனைக்கு டெல்லி அரசு புது நிபந்தனை

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஜன. - 23 - கதிர்வீச்சு அளவு குறிப்பிட்டே இனி செல்போன்களை விற்க வேண்டும் என்று டெல்லி மாநில அரசு உத்தரவு பிறப்பிக்க திட்டமிட்டுள்ளது.  செல்போன் பயன்படுத்தும் போது உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு புற்று நோயை உண்டாக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டது. இந்த நிலையில் டெல்லியில் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் அவை வெளிப்படுத்தும் கதிர்வீச்சு அளவை குறிப்பிட்டே ஆக வேண்டும் என்று மாநில அரசு அறிவிப்பு வெளியிட உள்ளது. அதன்படி மொபைல் போன்கள் விற்கப்படும் பெட்டியின் மீதோ அல்லது தனியாகவோ இதை தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மொபைல் போன் நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய டெல்லி மாநில அரசின் சுகாதார துறை அமைச்சர் வாலியா, ஏற்கனவே மின்னணு கருவிகள் வெளியிடும் கதிர்வீச்சு தொடர்பாக விதிகளை உருவாக்க மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக கூறினார். எனவே மொபைல் போன் கதிர்வீச்சு அளவை தெரிவிப்பது தொடர்பாக மத்திய சுகாதார துறையிடம் பேசி இதற்குரிய தனி விதிகளை சில வாரங்களில் கொண்டு வரப் போவதாகவும் வாலியா கூறினார்.
 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: