முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. கூட்டணிக்கு வருகிறார் வைகோ

வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச் 18 - அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதிகளை பங்கீடு செய்வதில் பிரச்சனை ஏற்பட்டு விட்டதாகவும் இதனால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணி அமையப்போவதாகவும் ஒரு சில தொலைக் காட்சிகள் நேற்று முழுவதும் செய்திகளை வெளியிட்டு சந்தோசப்பட்டுக்கொண்டன. அதுமட்டுமல்ல ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு இருப்பது போல் இந்த டி.வி.க்கள் காட்டிக்கொண்டன. ஆனால் மூன்றாவது அணி அமைவதில் வைகோவுக்கு மட்டுமல்ல, விஜயகாந்துக்கும் விருப்பமில்லை. காரணம் அப்படி அமைந்தால் அது கருணாநிதிக்கு சாதகமாகிவிடும் என்று அவர்கள் தெரிவித்தார்களாம். இதனிடையே பிரச்சனையை தீர்க்க அ.தி.மு.க. மேலிடமும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விஷயத்தில்தான் பிரச்சனை என்பதை தெரிந்துகொண்ட அ.தி.மு.க. மேலிடம் அந்த பிரச்சனைக்கு தனது முன்னணி தலைவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி நேற்று இரவே தீர்வுகண்டது. இதன்மூலம் கம்யூனிஸ்ட்டுகள் கேட்கும் சில தொகுதிகள் அவர்களுக்கு தரப்படும் எனத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, அ.தி.மு.க. கூட்டணிக்கு இதர தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் விருப்பப்படி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று வருகிறார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவர் இன்று சந்திப்பார் என்றும் அவரது கட்சிக்கு 15 இடங்கள் வரை ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது. இதன் மூலம் அனைத்துப் பிரச்சனைகளுக்குமே இன்று ஒரு சுபமான முடிவு ஏற்பட உள்ளது. தொகுதிகள் பிரச்சனையை தீர்த்தவுடன் திட்டமிட்டபடி ஜெயலலிதா தனது பிரச்சாரத்தை துவக்குவார் எனத் தெரிகிறது. அ.தி.மு.க. கூட்டணி அவ்வளவுதான் என்று பகல்கனவு கண்ட எதிரணிக்கு இன்று மாபெரும் ஏமாற்றம்தான் கிடைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்