எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டாக்கா, மே 31- வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பலவீனமான அணியை இந்தியா தேர்வு செய்து அனுப்பும் என்று எதிர்பார்க்கவில்லை என்று வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹீம் கூறியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் இந்திய அணியில் தோனி, கோலி, தவான், ரோகித் சர்மா, அஸ்வின் உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறித்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹீம் தெரிவித்ததாவது: இந்தத் தொடரை இவ்வளவு சாதாரணமாக அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதற்குக் களத்தில் பதிலடி கொடுப்போம், இதனால் எங்களுக்கு கூடுதல் உத்வேகம் ஏற்பட்டுள்ளது. இன்னும் இந்தியா எங்களை அழைக்கவில்லை எனவே இந்தத் தொடர் மூலம் அவர்களுக்குச் ‘செய்தி’ ஒன்றை தெரிவிப்போம்.
நாங்கள் இந்தியாவின் சிறந்த அணியையே தோற்கடித்துள்ளோம். இந்த இந்திய அணி இளம் அணி, ஐபிஎல் கிரிக்கெட்டின் தரநிலை என்னவாக இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட் என்பது எப்போதும் கடினமே. ஒன்று மட்டும் உறுதி, தோற்றால் அது இந்தியா தோற்றதாகவே அர்த்தம், இந்தியா ஏ அல்ல. இதனால் இந்திய அணிக்கே நெருக்கடி அதிகம்.இந்திய அணியைப் பார்த்த பிறகு எங்கள் வெற்றி குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிச்சயம் கூடியிருக்கும்”
இவ்வாறு கூறியுள்ளார் முஷ்பிகுர் ரஹீம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |