முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் சீன கப்பல்கள்: ஜப்பான்

சனிக்கிழமை, 7 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, ஜூன் 8 - ஜி 7நாடுகளின் தலைவர்களின் எச்சரிக்கையையும் மீறி சர்ச்சைக்குரிய கிழக்கு சீன கடல் பகுதியில் 2 கப்பல்களை சீனா நிறுத்தியுள்ளது என்று ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது. 

இது குறித்து ஜப்பானின் கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், சீனாவின் 2 கப்பல்களும், முதலில் ஒட்சுரிஜிமா தீவில் இருந்து 27 கி.மீ தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பின்னர் அவை ஜப்பானின் சென்காகு தீவுகளுக்கு அருகில் உள்ள கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளன என்றார். முன்னதாக பிரசல்ஸில் நடைபெற்ற மாநாட்டில் ஜி 7 நாடுகளின் தலைவர்கள் கூறுகையில், தெற்கு மற்றும் கிழக்கு சீனா கடல் பகுதிகளில் பதட்டம் நிலவுவதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அந்த பகுதிகளை எந்தவொரு நாடும் அச்சுறுத்தியோ மிரட்டல் விடுத்தோ உரிமை கோர கூடாது என்றனர். ஜப்பானுக்கும், சீனாவுக்கும் இடையே உள்ள சென்காகு தீவுகளை இரு நடுகளும் சொந்தம் கொண்டாடி வந்த நிலையில் அந்த தீவுகள் தங்களுக்கே சொந்தம் என்று 2012ம் ஆண்டு ஜப்பான் திட்டவட்டமாக அறிவித்தது. இதையடுத்து அந்த பகுதியில் சீனா அடிக்கடி கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்