முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலைவாசியை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி கவர்னர் யோசனை

செவ்வாய்க்கிழமை, 17 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூன்.18 - உணவுப் பொருள் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் விலைவாசியை சற்று கட்டுப்படுத்த முடியும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார். 

மும்பையில் நேற்று நிதித்துறை சட்ட சீர்திருத்த குழுவின் அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரகுராம் ராஜன் கூறியதாவது: ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ளது. இதன் விளைவு, விலைவாசி உயர்வாக இருக்கும். ஆனால், விலைவாசி உயர்வை, உணவுப் பொருட்கள் மேலாண்மை மூலம் சற்று கட்டுப்படுத்த முடியும். இராக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவு பணவீக்கம் உயர்ந்துள்ளது, ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இது குறித்து கண்காணித்து வருகிறது. 

பணவீக்கத்தை சமாளிக்க அடுத்த காலாண்டுகளில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். உள்கட்டமைப்பு நிதி மற்றும் பொது நிதி வரத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி முயற்சி செய்யும். உள்கட்டமைப்புக்கு போதுமான நிதியை கொண்டு சேர்ப்பது மற்றும் கொள்கைரீதியான மாற்றங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும். இந்தியாவில் தேவையான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி இடையேயான நிதிப் பற்றாக்குறை குறைவாகவே நீடிக்கிறது. இராக் உள்ளிட்ட வெளிநாடுகளில் நிலவும் உள்நாட்டு பிரச்சினைகள் இந்தியாவை நேரடியாக பாதிக்காது. இராக்கின் நிலைமை சீரில்லாமல் உள்ளது, 

நடப்பு கணக்கு பற்றாக்குறையில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை. வலுவான அந்நிய செலாவணி கையிருப்பு இருப்பதாக் நாட்டின் நிதி நிலைமை மோசமடையவில்லை. இவை கடந்த ஆண்டு இருந்த நிலைமையை விட மேலாகவே உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago