முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயணிகள் பாதுகாப்புக்காக 1000 ரயில்களில் கேமரா!

திங்கட்கிழமை, 16 ஜூன் 2014      வர்த்தகம்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன் 17 - ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த  முதல் கட்டமாக ஆயிரம் ரயில்களில் புதிதாக இணைக்கப்படும் பெட்டிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தீவிரவாதிகள் ஒவ்வொரு முறை மிரட்டல் விடும்போதம்,  அவர்களின் இலக்கு  ரயில்வே ஆக உள்ளது.  மும்பை தாக்குதலின்போதும் சரி, கடந்த மாதம் சென்னை சென்ட்ரலில் ந டந்த குண்டுவெடிப்பிலும் சரி பாட்நாவில் னடைபெற்ற மோடி கூட்டத்திலும் தீவிரவாதிகள் ரயில்களை குறிவைத்தே   தாக்குதல் னடத்தி வருகிந்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்னும் பலப்படுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

   பாதுகப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள   ரயில்வே போலீஸாரும் திட்டமிட்டு வருகின்றனர்.  தற்போது முக்கிய ரயில் நிலையங்களில்  சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அடுதத கட்டமாக ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த  ரயில்வே நிர்வாகம்  முடிவு செய்துள்ளது.   ஏற்கெனவே நகை பறிப்பு பெண்கள் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்களை தடுக்க பெண்கள் பெட்டிகளில் கண்காமிப்பு காமிராக்களை பொருத்த கோரிக்கை விடப்பட்டது. இன்த நிலையில் புதிய  பெட்டிகளில்  சிசிடிவி காமிராக்களை பொருத்த ரயில்வே னிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

  இதுபற்றி ரயில்வே பாதுகாப்புப்  படை   தலைஹமை இயக்குநர் கிருஷ்ணா சவுத்திரி கூறிதாவது: 

ரயில்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில்  ஆயிரம் ரயில்களில் புதிதாக  இணைக்கப்படும்  பெட்டிகளில் சிசிடிவி கண்காமிப்பு காமிராக்கள் பொருத்த  முடிவு செய்யப்பட்டுள்ளது.  ரயில்களில் நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்கள், பயணிகள் மீதான தாக்குதல், தீவிரவாத சம்பவங்களில் குற்றவாளிகளைற அடையாளம் காண கேமராக்கற் உதவுகின்றவ. ரயில் பெட்டி களிலும் சிசிடிவி  கண்காமிப்பு காமிராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது..

  இது தற்போது கொள்கை அளவில்  ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.  விரைவில் 1000 ரயில்களில்  கேமரா பொருத்தப்படும்.   படிப்படியாக அநைத்து ரயில்களிலும் கேமராக்கற் பொருத்த னடவடிக்கை எடுக்கப்படும். அதிக திறன் கொண்ட  கேமராக்களைற பொருத்துவதன் மூலம் சமூக விரோத சம்பவங்களை உடனடியாகக் கண்காணித்து தடுத்து நடவடிககை எடுக்க முடியும். தற்போது நாடு முவுவதும் 3500 ரயில்களில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  குற்ஹங்கள் குறித்து மேஹ் அதிகாரிகளிடம் தகவல் அளிக்கவும், தடயங்கள் உடநுக்குச் பதிவு செய்யவும் ஸ்மார்ட் போன் வழங்கவும் ரயில்வே னிர்வாகம் முடிவு செய்துள்லது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!