முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக் பிரச்சினைக்கு ராணுவ தீர்வு சரிவராது: ஒபாமா

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், ஜூன் 23 - ஈராக் பிரச்சினைக்கு அரசியல்ரீதியான தீர்வு காணப்பட வேண்டுமே தவிர, ராணுவ ரீதியிலான தீர்வை எட்ட முடியாது என்று அமெரிக்க அதிபர்  ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் சன்னி பிரிவு முஸ்லிம்கள் ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டு பல நகரங்களை கைப்பற்றியுள்ள நிலையில், அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி நகரங்களை மீட்டுக்கொடுக்கும் என்று ஈராக் அரசு நம்பிக்கொண்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சிக்கு ஒபாமா அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

ஈராக் அனைவரையும் ஒருங்கித்த ஒரு ஜனநாயகமாக வளர அமெரிக்க வாய்ப்பளித்திருந்தது. முஸ்லிம் மதத்திலுள்ள அனைத்து பிரிவினரையும் அரவணைத்து செல்லும் ஈராக்கை பார்க்கவே அமெரிக்காவும் விரும்புகிறது. ஈராக்கில் அமெரிக்க துருப்புக்களை நிலை நிறுத்த விரும்பவில்லை. அதே நேரம் ராணுவ ஆலோசகர்கள் 300 பேரை ஈராக்கிற்கு அனுப்பி வைக்க உள்ளேன். அவர்கள் சனிக்கிழமை அந்த நாட்டை சென்றடைவார்கள்.

ஈராக் கிளர்ச்சியாளர்களுடன் அரசியல்ரீதியாக அந்த நாடு தீர்வை எட்ட வேண்டும். அப்படியில்லாவிட்டால், ராணுவ ரீதியிலான தீர்வை எட்ட முடியும் என்று நான் கருதவில்லை என்று ஒபாமா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்