முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி பேர ஊழல்: 14 புதிய வழக்குகள் தொடர சிபிஐ முடிவு

புதன்கிழமை, 16 ஜூலை 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 17 - நிலக்கரி பேர ஊழல் வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை நாளை 18ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறுகிறது. 64 இடங்களில் நிலக்கரி எடுப்பது தொடர்பாக நடந்த பேரம் பற்றிய ஊழல் குறித்து விசாரிக்கப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் நிலக்கரி பேர ஊழல் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேலும் ஒரு அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மத்திய ஊழல் தடுப்பு கமிட்டி சுரங்க பேர ஊழல் தொடர்பாக மேலும் 14 வழக்குகள் தொடர சிபாரிசு செய்து இருக்கிறது. அதன் அடிப்படையில் 14 புதிய வழக்குகளை பதிவு செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளது.

இது குறித்து சிபிஐ இயக்குனர் ரஞ்சித்சின்கா கூறும் போது, பாராளுமன்றத்தில் கூட்டுக்குழு நடத்திய விசாரணையின் அடிப்படையில் மத்திய ஊழல் தடுப்பு குழு புதிய வழக்குகளை தொடரும்படி சிபாரிசு செய்துள்ளது. அதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி வழக்குப் பதிவு செய்யப்படும் என்றார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தப்படுமா என்று கேட்ட போது, அது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ரஞ்சித் சின்கா கூறினார். நிலக்கரி பேர ஊழல் தொடர்பாக 2012 செப்டம்பர் வரை சிபிஐ வழக்குகளை பதிவு செய்துள்ளது. தற்போது மேலும் 14 வழக்குகள் சிபிஐ தொடர முடிவு செய்துள்ளது இந்த வழக்கில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony