தான்சானியாவில் அடுத்தடுத்து விபத்து: 57 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 7 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

டார்எஸ் சலாம், செப்.08 - தான்சாரியாவில் 2 பயணிகள் பஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 36 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அங்கு நடந்த மற்றொரு விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.

ஆப்பிரி்க்க கண்டத்தின் பொருளாதாரத்தின் இரண்டாவது நிலையில் உள்ள நாடாக தான்சானியா திகழ்கிரது. இங்கு நடந்து இருவேறு பயங்கர விபத்துகளில் 57பேர் பலியாகினர். தான்சானியாவில் புத்திமா மாவட்டத்தில் இருந்து டார் எஸ் சலாம் நகருக்கு பயணிகள் பஸ் வந்து கொண்டிருந்தது. நகரை நெருங்கிய போது எதிரே வந்த மற்றொரு பயணிகல் பஸ் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த 36 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

மேலும் பலர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தான்சானியா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயம் அடைந்த 12-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இறந்தவர்களின் உடல்களையும் மீட்டனர். இந்நிலையில், தான்சானியாவில் முபகா என்ற பகுதியில் மனி பச்சும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21 பேர் பலியானார்கள்.

தான்சானியாவில் மோசமான சாலைகள் மற்றும் பராமரிப்பு இல்லாத பஸ்களால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் 1,878 பேர் சாலை விபத்தில் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: