பாக்.கில் தீவிரவாதிகளால் சீக்கியர்கள் சுட்டு கொலை

ஞாயிற்றுக்கிழமை, 7 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

பெஷாவர், செப்.08 - பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் சீக்கிய இளைஞர் ஒருவர் தீவிரவாதிகயால் சுட்டு கொல்லப்பட்டார். பாகிஸ்தானில் வடமேற்கு பிராந்தியம் கைபர் பக்துன்கவா தலைநகரான பெஷாவரில் ஏராளமான பெஷாவரில் ஏராளமான சிறுபான்மை சமூகத்தினர் வசித்து வருகின்றனர். சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள், அகமதி மற்றும் ஷியா பிரிவை சேர்ந்த முஸ்லிம் கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்த பிராந்தியத்தில் சிறுபான்மையினரை குறிவைத்து சமீபகாலமாக அல் கொய்தா மற்ரும் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 6-ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் ஒரு சீக்கியர் பலியானார் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், மீண்டும் சீக்கியர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெஷாவர் நகரில் நோத்தியா பஜாரில் ஹர்ஜித் சிங் என்ற சீக்கிய இளைஞர் மளிகை கடை நடத்தி வந்தார். நேற்று முன் தினம் மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி தீவிரவாதி ஒருவன் ஹர்ஜித் சிங்கை துப்பாக்கியால் சுட்டான்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என்று குல்பர்க் காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: