முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் 4 பெண்களை கற்பழித்த 7 பேருக்கு தூக்கு!

திங்கட்கிழமை, 8 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

காபூல், செப்.09 - ஆப்கனில் பாஹ்மன் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஒரு திருமண வீட்டிற்கு சென்று விட்டு நள்ளிரவில் கார்களில் திரும்பி கொண்டிருந்தனர். அவர்களை வழி மறித்து பலாத்காரம் செய்த 7 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காபூல் புறநகர் அருகே வந்த போது 7 பேர் கொண்ட ஒரு கும்பல் அவர்களது கார்களை மறித்தனர். பின்னர் காரில் இருந்த 4 பெண்களை வலுக்கட்டாயமாக காரில் இருந்து வயல் வெளிக்கு இழுத்து சென்று கற்பழித்தனர். கற்பழிக்கப்பட்ட பெண்களில் ஒரு கர்ப்பிணியும் அடங்குவர்.

பின்னர் அவர்களிடம் இருந்து பணம், நகைகள் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர். பொதுவாக ஆப்கானிஸ்தானில் வீடுகளில் புகுன்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடப்பது சகஜம். ஆனால் இது போன்று பெண்களை கடத்தி கும்பலாக கற்பழிப்பது நடைபெறாது. எனவே இந்த கற்பழிப்பு சம்பவம் அங்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. அவர்களிடம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என அதிபர் ஹமீத் கர்சாய் உறுதியளித்து இருந்தார்.

அதன்படி, இந்த கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது காபூல் கோர்ட்டில் வழ்ககு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சபியுல்லா முஜாதிதி குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்கு தண்டைவிதித்து தீர்ப்பு அளித்தார். ஆப்கானிஸ்தான் சட்டப்படி அதற்கு அதிபர் கர்சாய் ஒப்புதல் அளித்தார். எனவே அந்த தண்டனை உறுதி செய்யப்பட்டது. இருந்தாலும் அவர்கள் இந்த தீர்ப்பை எLிர்த்து மேல் கோர்ட்டில் அப்பீல் செய்யலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago