எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, அக்.10 - எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில், 'பாகிஸ்தான் தனது அத்துமீறலை சாகசம் என நினைத்துக் கொண்டு தொடர்ந்தால் இந்திய தரப்பும் சாகசம் செய்ய வேண்டியிருக்கும். அதன் விளைவுகளை பாகிஸ்தான் தாக்குப் பிடிக்க முடியாது' என பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். அவர் கூறியதாவது: "எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என பாகிஸ்தான் விரும்பினால் இந்தத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்திக் கொள்வது நல்லது.
அதைவிடுத்து, பாகிஸ்தான் தனது அத்துமீறலை சாகசம் என நினைத்துக் கொண்டு தொடர்ந்தால் இந்திய தரப்பும் சாகசம் செய்ய வேண்டியிருக்கும். அதன் விளைவுகளை பாகிஸ்தான் தாக்குப் பிடிக்க முடியாது. இந்தியா பொறுப்புள்ள தேசம், எனவேதான் பாகிஸ்தான்போல் கோரத் தாக்குதலில் ஈடுபடாமல் அத்துமீறும் பாகிஸ்தான் ராணுவத்தினரை மட்டும் தாக்கி வருகிறது.
அதேவேளையில், இந்திய மக்களை காக்கும் பொறுப்பில் இருந்து எப்போதும் அரசு தவறாது. எல்லையில், பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு இந்திய தரப்பு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் எப்போதுமே போர் நிறுத்த ஒப்பந்தத்தை அத்துமீறுவதை வழக்கமாக கொண்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறலை நிறுத்தும்வரை அமைத்திப் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை" என தெரிவித்தார்.
இதற்கிடையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், "பாகிஸ்தான் தாக்குதலுக்கு எல்லை பாதுகாப்புப் படையினர் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். எல்லை நிலவரம் குறித்து பிரதமர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். அதனால், அவர் வாய் திறந்து பாகிஸ்தான் தாக்குதல் குறித்து விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.
கடந்த ஒரு வாரமாக இந்திய ராணுவ நிலைகள் மீதும், குடியிருப்புகள் மீதும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த திங்கள்கிழமை பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்முவின் ஆர்னியா பகுதியில் 5 பேர் கொல்லப்பட்டனர். 34 பேர் காயமடைந்தனர். கடந்த 3-ம் தேதி குல்மார்க், ஜம்மு, பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில் ஒரு பெண் உயிரிழந்தார். 6 பேர் காயமடைந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


