முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர் மலர் அஞ்சலி

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. 25 - 26_வது நினைவு நாளையொட்டிசென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா மலர் அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆரின் 26_வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மெரினா கடற்கரை பகுதி முழுவதும் அ.தி.மு.க. _ கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்_அமைச்சருமான ஜெயலலிதா காலை 10.45 மணிக்கு அங்கு வந்தார். அவரது கார் அங்கு வந்ததும் அ.தி.மு.க. தொண்டர்கள் எழுச்சியுடன் புரட்சித்தலைவி வாழ்க, நாளைய பிரதமரே வாழ்க என்று கோஷமிட்டனர்.

முதல்_அமைச்சர் ஜெயலலிதா எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

விழா மேடையில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி எடுத்தனர். அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி மொழியை படிக்க தொண்டர்கள் பின் தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், பா.வளர்மதி, மாதவரம் வி.மூர்த்தி, செல்லூர் ராஜு, சின்னையா, வி.செந்தில்பாலாஜி ரமணா, அப்துல்ரகீம், டாக்டர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்களும், கழக அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன், கோகுல இந்திரா, மகளிர் அணிச்செயலாளர் சசிகலா புஷ்பா, பி.எச்.பாண்டியன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், மேயர் சைதை துரைசாமி, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா எம்.பி., கலைராஜன், வி.என்.ரவி, வெங்கடேஷ்பாபு, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், சிவபதி, செந்தமிழன், வைகை செல்வன்.

ரத்தினவேலு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் டி.ஜெயக்குமார், கே.பி.கந்தன், குப்பன்,வேதாச்சலம் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், மேயர்கள் செ.ம.வேலுசாமி, ராஜன் செல்லப்பா, துணை மேயர் பெஞ்சமின், கொறடா மனோகரன், நாஞ்சில் சம்பத், பரிதி இளம்வழுதி, நடிகர்கள் ராமராஜன், தியாகு, தமிழ்மகன் உசேன். தென்சென்னை மேற்கு மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளர் ஏ.ஏ.அர்ஜுனன், கவுன் சிலர்கள் டி.சிவராஜ், அலி கான்பஷீர் மற்றும் வில்லி வாக்கம் டி.கே.ரமேஷ், மனோகரன்.

அண்ணா தொழிற்சங்க மாநில பேரவை துணை செயலாளர் பாண்டுரங்கன், மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள் லட்சுமி நாராயணன், ஏழுமலை, பழனி, முகப்பேர் செழியன், ராஜேஷ்கண்ணா, எம்.ஜி.ஆர். அறக்கடடளை தலைவர் பென்னிபிரபு, குடிசை மாற்று வாரிய தலைவர் கு.தங்கமுத்து, அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ், சி.பி.அசோக்குமார், தி.நகர் எஸ்.ஜெயராமன், ஆர்.வி.எம்.ஆனந்தன்,  மண்டல குழு தலைவர் முருகன் பெருமாள் அம்பத்தூர் நகர செயலாளர் அலெக்சாண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், பொதுச்செலயாளர் இசக்கிமுத்து, பெரியதுரை, பிரபு, நாதன், அர்ச்சுனன் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago