முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

டிஜிட்டல் ஆடைகள்

எதிர்காலத்தை கலக்க புதிய டிஜிட்டல் ஆடைகள் தயாராகி வருகின்றன. இன்றைய புதிய நூற்றாண்டின் யூத்களின் மனநிலைக்கு ஏற்ப எதிர்காலத்தில் மிகப் பெரிய பேஷன் சந்தைக்கான கதவுகள் திறக்கப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் ஆடைகள் என்றால்... வாருங்கள் பார்க்கலாம்..டிஜிட்டல் ஆடைகள் துணி அல்லது உறுதியான எதையும் கொண்டு செய்யப்படவில்லை. கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்கள் மற்றும் 3டி மென்பொருளைப் பயன்படுத்தி ஜவுளிகளை விட பிக்சல்களில் இருந்து ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. எனவே நிஜ வாழ்க்கையில் நீங்கள் டிஜிட்டல் ஆடைகளை அணிய மாட்டீர்கள். அதற்கு பதிலாக, நீங்கள் டிஜிட்டல் ஆடைகளை ஆன்லைனில் உலாவலாம் மற்றும் நீங்கள் விரும்பும் ஒன்றை ஆர்டர் செய்யலாம்.நீங்கள் இதை வாங்க முடிவு செய்து விட்டால், அதை நேரில் பார்ப்பதற்கு பதிலாக டிஜிட்டல் வடிவில்தான் பார்க்க முடியும். இதை நீங்கள் நேரடியாக தொடவோ அணியவோ முடியாது.  உங்கள் புகைப்படத்தில் தான் அணிய முடியும். இதற்காக பிரத்யேக டிஜிட்டல் ஆடை வடிவமைப்பாளர்கள் உள்ளனர். அவர்களிடம் ஆர்டர் செய்து டிஜிட்டல் முறையில் அவற்றை அணிந்து கொள்ளலாம்.இதில் குறிப்பாக தற்போது ஃபேஷனாக பரவி வருவது என்னவென்றால் வழக்கமான மேல் சட்டை கால் சட்டை என்பதாகஅல்லாமல் பாரம்பரிய உடைகள், வித்தியாசமான உடைகள் என விதவிதமாக கலக்கலாம். இவற்றிற்கும் குறிப்பிடத்தக்க அளவில் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இன்றைய நவீன யுகத்தில் தங்களை புதிய அவதார்களாக காட்டிக் கொள்ள விரும்பும் யூத்களுக்கும், நவீன டிஜிட்டல் பேஷன் விரும்பிகளுக்கும் இது மிகப் பெரிய சந்தையாக விரிவடைந்து வருகிறது. தொட்டுணரும் தன்மையிலிருந்து விலகி ஒரு புதிய உலகுக்கான கதவை இது திறந்து விட்டுள்ளது. தற்போது இதை அணியும் இளைஞர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இதை அடிப்படையாக வைத்து தற்போது பேஸ்புக்கும் மெட்டாவெர்சன் என்ற புதிய அவதாரத்தை தொடங்கியுள்ளதாகவும் பேஷன் நிபுணர்கள் கருதுகின்றனர். எதிர்காலத்தில் புதிய பேஷன் சந்தைக்கான புதிய கதவு திறந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

பறக்கும் பைக்

ஹோவர் பைக் எனப்படும் பறக்கும் மோட்டார் சைக்கிளை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஸ்கோர்பியன் 3 ஹோவர் பைக் என்று பெயரிடப்பட்டுள்ள இது, மின்சாரம் மூலம் இயங்குகிறது. ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்கக் கூடிய ஹோவர் பைக்கானது தரையில் இருந்து 33 அடி உயரத்தில் மணிக்கு 30 மைல்கள் என்ற வேகத்தில் பயணிக்கும்.

மூட்டுகள் பலப்பட

எலும்பு மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், முதலில் சரியான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். அழற்சி எதிர்ப்பு உணவுகளான ஆலிவ் ஆயில், முழு தானியங்கள் போன்றவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், வைட்டமின் மற்றும் கனிமச்சத்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டும்.

புதிய வசதி

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராம் 600 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. இந்த இன்ஸ்டாகிராமில் ஒரே ஒரு போட்டோ மட்டுமே இதுவரை அனுப்ப முடியும். ஆனால் தற்போது பல புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் புதிய வசதி அப்டேட் ஆகியுள்ளது.

புதிய கேமரா

கூகுள் க்ளிப்ஸ் என்ற தானியங்கி கேமராவில் உள்ள செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்டவற்றின் முகங்களை அடையாளம் காண முடியும். இந்த ஸ்மார்ட் கேமரா தான் இருக்கும் இடத்திலேயே எந்த விதமான மனித தலையீடும் இல்லாமல் புகைப்படங்களை எடுக்குமாம். இது 130 டிகிரி கோணத்தில் உள்ளவற்றை புகைப்படம் எடுக்கும் ஆற்றல் கொண்டது.

மேலும் வசதி

விபத்தை தவிர்க்கும் வகையில், தானாக இயங்கக்கூடிய ஸ்கூட்டரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். ஒரு நபர் மட்டுமே பயணிக்கக் கூடிய இந்த ஸ்கூட்டரில் நான்கு சக்கரம் உள்ளது.இதன் எடை 50 கிலோ ஆகும். அதிகபட்சமாக மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ஸ்கூட்டர் பயணிக்கும் போது இடையூறுகள் வந்தால் அதனை கண்டறிவதற்காக இதில் சென்சார்ஸ் பொருத்தப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago