முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உறங்கும் போது எப்படி படுக்க வேண்டும்

முந்தைய இரவு உறக்கத்தைப் பொருத்தே அடுத்த நாளின் செயல்திறன் நிர்ணயிக்கப்படுவதால் உடலுக்கு தூக்கம் தவிர்க்க முடியாதது. ஆனால், எந்த நிலையில் தூங்கினால் உடல்நலனுக்கும் மனநலனுக்கும் நல்லது என்பது முக்கியமானது. உங்களுடைய முதுகெலும்பை சரியாக சீரமைக்கும் நிலையில் தூங்குவதன் மூலம் மட்டுமே தூக்கம் மேம்படும். உடலில் எவ்வித பிரச்னைகளும் ஏற்படாது. முதுகு படுக்கையில் படும்படி கிடைமட்டமாக படுத்துத் தூங்குவது முதுகெலும்பை சரியான நிலையில் பராமரிக்கிறது. இது கீழ் முதுகு மற்றும் கழுத்துத் தசைகள் இரண்டையும் தளர்த்தும். இந்த நிலையில் தூங்குவது ஒரு நிம்மதியான தூக்கத்தைத் தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மெல்லிய மெத்தை, தலையணையை உபயோகித்தால் தோள்பட்டை அல்லது கழுத்து வலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

இந்தியாவின் மர நகரம் எது தெரியுமா?

ஆர்பர் டே அறக்கட்டளை மற்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இணைந்து ஆண்டுதோறும் ‘உலகின் மர நகரம்’ என்ற அங்கீகாரத்தை உலகில் உள்ள நகரங்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு மும்பையை “உலகின் மர நகரம் 2021” ஆக அறிவித்துள்ளது. இந்த பட்டத்தை வெல்லும் இந்தியாவின் இரண்டாவது நகரம் மும்பை ஆகும். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஐதராபாத் ‘உலகின் மர நகரம்’ என்ற பட்டத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த அங்கீகாரத்தின் மூலம், ஆரோக்கியமான, நெகிழக்கூடிய மற்றும் மகிழ்ச்சியான நகரங்களை உருவாக்குவதில் மரங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் ஒத்த எண்ணம் கொண்ட நகரங்களின் பட்டியலில் மும்பை இணந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனின் (பிஎம்சி) தோட்டத் துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற காடுகளுக்கு மத்தியில் பசுமையை நிலைநிறுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட 21 நாடுகளைச் சேர்ந்த 138 நகரங்களின் குழுவில் வட இந்தியாவின் தூக்க நகரமான மும்பையும் இணைக்கப்பட்டுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கூகுள் லென்ஸ்

கூகுள் லென்ஸ் மூலம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை உங்கள் கைபேசியின் கேமராவில் காட்டினால் அதைப்பற்றிய முழு தகவல்களையும் உங்களுக்கு அளித்துவிடும். உதாரணமாக நீங்கள் செல்லும் வழியில் ஒரு பூவை பார்க்கிறீர்கள். அந்த பூவைப்பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் அந்த பூவை உங்கள் கேமராவில் காட்டினால் போதும், உங்களுக்கு எல்லா தகவல்களையும் கூகுள் லென்ஸ் தெரிவித்துவிடும். கடினமான வைஃபை ரகசிய எண்ணை மிக எளிதாக கூகுல் லென்ஸ் மூலம் அறிந்து கொள்வதுடன், வைஃபை-யை இணைத்தும் கொள்ளலாம்.மேற்கொண்ட வசதிகளை கொண்ட கூகுள் அசிஸ்டண்ட்கள் அனைத்து ஆண்டராய்டு மொபைல்களிலும் உள்ளது.

கிடைத்தது ஆதாரம்

லிபியாவில் உள்ள சஹாரா பாலைவனத்தில் கிடைத்த ஆதாரங்களின் படி, மனிதர்கள் 10,000 வருடங்களுக்கு முன்பே காட்டு தானியங்கள் மற்றும் தாவரங்களை வைத்து பானைகளில் சமைத்துள்ளது தெரிய வந்தள்ளது. ஆரம்பத்தில் சைவமாகத்தான் இருந்த மனிதர்கள் , பின் விலங்குகளை வேட்டையாடிச் சாப்பிடும் அசைவத்திற்கு மாறியிருக்கின்றனர்.

மிதக்கும் சொர்க்கம்

பிரான்ஸ், செயின்ட் நகரில் ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் நிறுவனம் உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலை வடிவமைத்துள்ளது. உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலாக கருதப்படும் இந்த ஹார்மோனி ஆஃப் தி சீஸ் 1.1 பில்லியன் டாலர் மதிப்பில் கட்டப்பட்டிருக்கிறது. 1.20 லட்சம் டன் எடையும், 210 அடி உயரமும், 362 மீட்டர் நீளமும் கொண்டது. 16 தளங்களை கொண்ட இந்த பிரம்மாண்ட சொகுசு கப்பலில் 6,360 பயணிகளும், 2,100 கப்பல் பணியாளர்களும் பயணிக்கலாம். வரும் மே மாதம் பிரான்ஸ் நாட்டின் சவுதம்டன் நகரிலிருந்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவுக்கு முதல் பயணத்தை துவங்க இருக்கிறது இந்த ஹார்மோனி ஆஃப் தி சீஸ் சொகுசு கப்பல்.

உலகில் அதிகமான சிகரங்களை கொண்ட மலை எது தெரியுமா?

உலகில் அதிகமான சிகரங்களை கொண்ட மலை எது தெரியுமா... அது நமது நாட்டில் உள்ள இமயமலைதான். உலகில் உள்ள உயரமான சிகரங்களில் 30 சதவீதம் இமயமலையிலேயே அமைந்துள்ளன. உலகிலேயே மிகவும் உயரமான எவரெஸ்ட் சிகரமும் இமயமலையில்தான் உள்ளது. இதில் ஆண்டு தோறும் சுமார் 1200 பேர் மலையேற்ற பயிற்சி  பெறுகின்றனர். அவர்களில் பாதிக்கும் குறைவானவர்கள் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தை அடைகின்றனர் என்றால் ஆச்சரியம் தானே.. மேலும்  கடந்த நூற்றாண்டில் எவரெஸ்ட் ஏற முயன்று சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 பேர் இது போன்ற வழிகளில் உயிரிழக்கின்றனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட முடியாமல் இன்னும் பனியிலேயே புதைந்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago