முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மாதுளை நன்மை

இதயத்திற்கு வலுசேர்க்கும் மாதுளை எளிதில் ஜீரணமாகும் பழம். இதன் தோல், இலை, பூ, காய், வேர், விதை போன்ற அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. உடலில் ஏற்படும் சோர்வு நீங்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், ஈரலின் செயல்பாட்டிற்கும் ஏற்றதாக இது இருக்கிறது. ஈரலில் வைட்டமின் ஏ-யை சேகரிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.

புதையல் புதிது

சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியானிங் மாகாணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய புராதனப்பொருட்களை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். கிறிஸ்து பிறப்பதற்கு முன், சீன ஹன் மன்னராட்சியின் வெண்கல காலத்தினை சேர்ந்த பானைகள், பாத்திரங்கள், இரும்பு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வந்து விட்டது தலைமுடிக்கும் மவுசு கேசத்தில் தயார் செய்த ஆடைகள் டிரெண்டிங்

விலங்குகளின் தோல்களையும், ரோமங்களையும் கொண்டு ஆடைகள் தயார் செய்தது பழைய காலம். பின்னர் பருத்தியையும் மரத்திலான நார்களையும் பயன்படுத்தி ஆடைகள் செய்வது தற்காலம். ஆனால் மனித கேசத்தில் நவீன ஆடைகளை தயாரிப்பதுதான் தற்போது நியு டிரெண்டிங்.  ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் Zsofia Kollar என்பவர்தான் இந்த புதிய ஐடியாவுக்கு சொந்தக்காரி. தற்போது ஜவுளி உற்பத்தியின் வயிற்றை கலக்கியுள்ள இந்த புதிய ஆடை வடிவமைப்பு பிரபலமாகத் தொடங்கியுள்ளது. மேலும் பசுமை ஆடை, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத ஆடை என்ற பெயரில் பல்வேறு ரகங்கள் சந்தையில் குவிந்து வரும் வேளையில் உண்மையிலேயே இது ஒரு மாற்றுதான் என்கிறார் இவர். முடி, அதன் அளவு, நச்சுத்தன்மையற்ற தன்மை, அதிக இழுவிசை வலிமை, வெப்ப இன்சுலேட்டர், நெகிழ்வுத்தன்மை, இலகுரக மற்றும் எண்ணெயை உறிஞ்சும் திறன் ஆகியவற்றின் காரணமாக, ஜவுளி உற்பத்தி முறைக்கு ஒரு சிறந்த சேர்க்கையாக அமைகிறது என்று ஜவுளித்துறையின் தலையில் தூக்கி கல்லை போடுகிறார். ஜவுளி உற்பத்தியால் ஏற்படும் ரசாயன மாசுபாட்டிலிருந்து விலகி இது முற்றிலும் இயற்கையானதாக இருக்கும் என்கிறார். தற்போது இவரது நவீன ஆடை ரகம் ஜெட் வேகத்தில் டிரெண்டாகி வருகிறது.

ஸ்மார்ட் ஸ்கார்ஃப்

காற்று மாசுபடுதலில் இருந்து தற்காத்துக் கொள்ள ஸ்மார்ட் ஸ்கார்ஃப் ஒன்று அறிமுகமாகியுள்ளது. வையர் என்ற இந்த ஸ்கார்ஃப், மொபைல் ஃபோனுடன் இணைந்து செயல்படுகிறது.  நாம் வெளியே வரும்போது, காற்றின் மாசு எவ்வளவு, ஸ்கார்ஃப் அணிய வேண்டுமா வேண்டாமா என்பதை இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் போன் தனது அப்ளிகேஷன் மூலம் வழிகாட்டுகிறது.

அசாமில் கொண்டாடப்படும் அறுவடை திருவிழா எது தெரியுமா?

தமிழர்களாகிய நமக்கு தை பொங்கல் தான் அறுவடை திருவிழாவாகும்.அசாமில் ‘மாக் பிஹூ’ என்ற பெயரில் அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது. தெற்குப் பகுதியில் இருந்து வடக்குப் பகுதிக்கு சூரியனின் இடப்பெயர்ச்சியை மையமாக வைத்து கொண்டாடப்படுதம் இந்த பண்டிகையை, வட மற்றும் மத்திய இந்தியாவில் மகர சங்ராந்தி என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இந்திக் காலண்டரின் மாக் மாதத்தின் முதல்நாளில் வருவதாலும் இதை மகர சங்ராந்தி என்றழைக்கிறார்கள். மேலும், இந்தியாவில் உள்ள விவசாயிகள், அறுவடை திருநாளாக கொண்டாடுகின்றனர், ஆனால் மாநிலங்களுக்கேற்ப இந்த அறுவடை திருநாள் கொண்டாட்டங்கள் மாறுபடும். அதன் ஓர் அங்கமாக மூங்கில், வைக்கோல் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு கலைநயமிக்க தற்காலிக குடிசைகள் அமைப்பது அசாம் மக்களின் தொன்று தொட்ட பழக்கம். ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்தில் இந்த விழா கொண்டாடப்படும்.

மைக்ரோசிப்

அமெரிக்காவில் ஒரு நிறுவனம் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் உடலில் ஒரு ஊழியருக்கு 300 டாலர் செலவு செய்து மைக்ரோ சிப்களை பொருத்தியுள்ளது. இந்த சிப் அக்சஸ் கார்டு போன்று செயல்படுகிறது. அதாவது அலுவலகம் வரும்போது கதவுகளை திறப்பது, பன்ச் செய்வது, அவர்களுக்கான கணினியை பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு பயன்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago