முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எச்சரிக்கும் ஆய்வு

தொடர்ந்து மணிக்கணக்கில் தனியாக அமர்ந்து டி.வி. பார்க்கும் குழந்தைகளுக்கு அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது பெரிய அளவில் உடல்நலக் கோளாறு ஆபத்து ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது அவர்கள் உடல் எடை அதிகரித்து பருமனாவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆய்வில் அறையில் தனியாக அமர்ந்து டி.வி.பார்க்கும் சிறுமிகளில் 30 சதவீதம் பேரின் உடல் எடை அதிகரித்துள்ளதாம்.

புதிய முயற்சி

உலகின் மிகப்பெரிய பதிப்பக நிறுவனமான ஹார்ப்பர் கோலின்ஸ், தனது இந்திய கிளைகளில் பணியாற்றுபவர்களுக்கு, செல்லப்பிராணிகளை பராமரிப்பதற்காக, சம்பளத்துடன் கூடிய விடுமுறையை (ஐந்து நாட்கள்) அனுமதித்துள்ளது. மேலும், நொய்டாவில் உள்ள அலுவலகத்தில் செல்லப்பிராணிகளை அழைத்து வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆராரோ... ஆராரோ...

தூக்கம் வராமல் தவிப்போருக்கு தீர்வாக இப்போது ரோபோ தலையணை வந்துள்ளது. சோம்நாக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, மூச்சுவிடுவதை சீராகக் கண்காணித்து, தூக்கத்தை சீராக்குகிறது. மேலும் இது சுவாசத்தைக் கட்டுப்படுத்தி அமைதியான, ஆழமான தூக்கம் வர செய்யும். பாதியில் எழுந்தால்கூட இந்த தலையணை தாலாட்டுப் பாடி தூங்க வைக்கிறதுதான் ஆச்சரியம்.

விண்வெளியின் கருந்துளையிலிருந்து வெளிச்சம்

விண்வெளி அறிவியல் குறித்து உற்று கவனித்து வருபவர்களுக்கு தெரியும் பிளாக் ஹோல் என்பது குறித்து. பிரபஞ்சத்தில் அறியமுடியாத புதிரான அப்பகுதி குறித்து விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இன்னும் தலையை பிய்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மனித முயற்சிகளுக்கு அப்பால் விரியும் அதை நோக்கி பயணிக்கும் துணிச்சலும் ஆற்றலும் இன்னும் மனித இனத்துக்கு வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த சூழலில் தான் முதன்முறையாக பிளாக் ஹோலின் பின் புறத்திலிருந்து வெளிச்சம் வருவதை விண்வெளி வீரர்கள் கண்டுள்ளனர். சுமார் 1800 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலிருந்து இந்த ஒளி வநதுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அரிதான நிகழ்வு குறித்து நேச்சர் இதழிலும் அறிவியல் கட்டுரை ஒன்று வெளியாகி உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நாள்தோறும் 200 உயிரினங்கள் அழிகின்றன

சூழல் மாசு உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 150-200 வகையான தாவரங்கள், பூச்சிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சூழல் சமநிலை இழப்பால் டைனோசர்கள் அழிந்ததிலிருந்து தற்போது உலகம் எதிர் கொண்டு வரும் சூழல் அச்சுறுத்தல் முன்பை விட அதிகமாகும் என எச்சரிக்கின்றனர்.

நகத்தின் தோற்றம்

நம் விரலில் பாதி நக அளவில் பெரிய பிறை நிலா குறி தோன்றினால் அல்லது பிறை நிலா அறிகுறி மிக சிறியதாக இருந்தால் நம்முடைய ஆரோக்கியம் குறைவாக இருப்பதற்கு அறிகுறியாம். மேலும், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மந்தமாக இருக்குமாம். இதை சீனர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago