முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஓராண்டில் மிக வேகமாக வளரும் தீவு எது தெரியுமா?

உலகில் உள்ள கண்டத்திட்டுகள், தீவுகள் பூமியின் மாற்றத்தால் நகர்வதும், ஈர்க்கப்படுவதுமான செயல்கள் நடைபெறுகின்றன. அதே போல ஒரு சில தீவுகள் மிகவும் மேகமாக வளர்வதும், கடலில் மூழ்குவதுமாகவும் காணப்படுகின்றன. உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் தீவுகளில் ஐஸ்லாண்டு முன்னிலையில் உள்ளது. இது ஆண்டு ஒன்றுக்கு சுமார் 5 செமீ வரையிலும் வளர்ந்து வருகிறதாம். அது மட்டுமின்றி இந்த தீவில் வசிக்கும் மக்கள் தொகையில் சுமார் 60 சதவீதம் பேர் அதன் தலைநகரிலேயே வசிக்கின்றனர். மேலும் இந்த தீவில் கொசுக்களே கிடையாது என்பது ஆச்சரியம் தானே.

காஸ்ட்ரோ அறியாதது

பிடல் காஸ்ட்ரோ ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து கொண்டிருக்கும் போது தான் அரசியல் ஆர்வலராக மாறினார். இவருக்கு, சுருட்டு பிடிப்பது மிகவும் பிடித்தமான விஷயமாக இருந்தது. ஆனால், ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு 1985-ல்இருந்து சுருட்டு பிடிப்பதை நிறுத்தினார் . இவர் கியூபாவை, 49 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். இது பத்து அமெரிக்க அதிபரின் ஆட்சி கால வருடங்கள் ஆகும். ஈட்டி கொண்டு மீன் பிடிப்பது, சமையல் செய்வது மற்றும் புத்தகம் வாசிப்பது போன்றவை பாலிய வயது பிடல் காஸ்ட்ரோவுக்கு பிடித்த விஷயங்களாக இருந்தன. கியூபாவின் பிரதமராக 1959 - 1976 வரையும்., 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார் பிடல் காஸ்ட்ரோ.

கீரை வகைகள்

கோடைக்காலத்தில் வல்லாரைக்கீரை, பசலைக்கீரை, வெந்தயக்கீரை, சக்கரவர்த்திக்கீரை, கரிசலாங்கன்னிக்கீரை, மனத்தக்காளிக்கீரை, தண்டுக்கீரை, அகத்திக்கீரை ஆகியவற்றையும் மழை மற்றும் பனிக்காலத்தில் கற்பூரவல்லி, அரைக்கீரை, முசுமுசுக்கை, தூதுவளை, புதினா போன்ற கீரைகளை இரவு நேரத்தில் உணவில் சேர்க்கக்கூடாது. அப்படி சேர்த்தால் பிரச்சனைதான்.

புதிய நட்சத்திர கூட்டம்

சூரியனை விட 20 மில்லியன் பில்லியன் மடங்கு அதிக அடர்த்தி கொண்ட புதிய நட்சத்திர கூட்டத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சரஸ்வதி என பெயரிடப்பட்டுள்ள இந்த நட்சத்திர கூட்டம் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும், இது பூமியிலிருந்து 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த நட்சத்திர கூட்டத்தில் 42 குழுக்களாக பத்தாயிரத்துக்கும் அதிகமான நட்சத்திர கூட்டங்கள் உள்ளன. இதனை இந்தியாவின் புனேவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டிறிந்து, இதற்கு சரஸ்வதி என்று பெயரிட்டுள்ளனர். இதுவே நமது பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திர கூட்டத்திலேயே மிகப் பெரியதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொறு கோள்

சூரியக்குடும்பத்தில் இதுவரை 9 கோள்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் புளூட்டோவுக்கு கோள்களுக்கான தகுதி இல்லை எனக்கூறி அது நீக்கப்பட்டது.  இந் நிலையில் செவ்வாய் கோள் போன்ற விண்பொருள் ஒன்று சூரியக்குடும்பத்தின் எல்லையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அந்த விண்பொருளின் காந்த விசையை பொருத்தே அது கோளா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

'செவ்வாய்' போகலாம்

மனிதர்கள், 2030-ல் செவ்வாய் கிரகத்தில், வசிக்கலாம் என அமெரிக்க விண்வெளி அமைப்பான ‘நாசா’ அறிவித்திருந்த நிலையில், அங்கு கியூரியாசிட்டி என்ற விண்கலம் நடத்திய ஆய்வின் முடிவில், செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ அனைத்து வசதிகளும் இருப்பதாக தெரிவித்தது.தற்போது, செவ்வாய் கிரகத்தில் உதோபியா பிளானிசியா என்ற இடத்தில், 80 மீட்டர் ஆழத்திலிருந்து 170 மீட்டர் ஆழம் வரை உள்ள ஒரு மிகப்பெரிய அளவிலான நீர்த்தேக்கம் உறைந்து காணப்படுவதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தகவலின்படி, அங்கு இதற்கு முன் உயிரினங்கள் வாழ்ந்திருக்க வாய்ப்புள்ளது என நாசா தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago