முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஜெர்மன் சர்க்கஸ் கம்பெனியில் நிஜ விலங்குகளுக்கு பதிலாக ஹோலோகிராம் உருவங்கள்

தற்காலத்தில் உலகம் முழுவதும் மிருகவதைக்கு எதிரான விழிப்புணர்வும், கோஷங்களும் பெருகி வருகின்றன. அதிலும் குறிப்பாக சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் மிருகங்களை அடித்து வதைத்து பழக்கி அவற்றை சாகசம் செய்வதற்கு பல்வேறு நாடுகளிலும் கடுமையான தடை சட்டங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நவீன யுகம் எல்லாவற்றுக்கும் ஒரு மாற்று வழியை கண்டுபிடித்து தந்து விடுகிறது. தற்போது புதிய தொழில் நுட்பமான ஹோலோகிராம் தொழில் நுட்பம் இதற்கும் கை கொடுக்கிறது. அசலான மிருகங்களுக்கு பதிலாக ஹோலோ கிராம் உருவங்களை அசலான மிருகங்களை போலவே உருவாக்கிர அவற்றை சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்ய ஜெர்மனி சர்க்கஸ் நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது. அங்கு 2018 முதல் விலங்குகளை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது ஹோலோகிராம் 3டியில் குதிரை, மீன்கள், யானை உருவங்களை அசல் விலங்குகளுக்கு பதிலாக பயன்படுத்தி கூட்டத்தை ஈர்த்து வருகிறது.

மாறும் வாழ்க்கை

இந்தியர்கள் தங்களது வாழ்க்கை துணையை விட ஸ்மார்ட்போன் தான் முக்கியம் என ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். ஆய்வில் கலந்து கொண்ட 60 சதவிகிதம் பேர் இதை தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு ஒருவரின் இணைய பயன்பாடு அவரது உறவு, நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுடன் எவ்வாறு பாதிக்கிறது என்பதை கண்டறிய நடத்தப்பட்டது.

பெண்களின் திறமை

ஒருவரின் கண்களை பார்த்து அவரது மனநிலையை அறிந்து கொள்ளும் மனரீதியான திறமை பெண்களிடம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபணு மாறுபாடு காரணமாக பெண்களுக்கு இத்தகைய திறமை உள்ளதாம். இதுகுறித்த ஆய்வில் பங்கேற்ற 89 ஆயிரம் பேரிடம் மனிதனின் கண்களை பார்த்து மனநிலையை அறியும் திறமை இருப்பது தெரிய வந்தது. மேலும், இந்த திறமை ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் உள்ளது.

இப்படியும் சிலர்

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரூ.6000 கோடி மதிப்புடைய ஹரேகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கணேஷ்யாம் தோலாக்கியாவின் மகன் ஒருவர் ஒரு மாதம் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். செகந்திராபாத்தில் 100 ரூபாய் வாடகை அறையில் தங்கிய அவர் காலணி கடைகளில் பணியாற்றியும், ரிக்ஷா தொழிலாளிகளுடன் தங்கியும் இந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.

ஃபேஸ்புக் பயன்பாடு

உலக அளவில் அதிக பேஸ்புக் பயன்பாட்டாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் மொத்தம் 24.1 கோடி பேர் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் அந்த எண்ணிக்கை 24 கோடிதான். கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்தியாவில் பேஸ்புக் பயன்பாட்டார்களின் எண்ணிக்கை 5 கோடி அதிகரித்துள்ளதாம்.

கூகுள் வளாகத்தில் ஆடுகள் சுற்றித் திரிவது உங்களுக்கு தெரியுமா?

உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் ஜாம்பாவான் கூகுள் நிறுவனம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். உலகில் உள்ள அனைத்து தேடுபொறிகளையும் பின்னுக்கு தள்ளி விட்டு இன்று முன்னணியில் உள்ள கூகுள் நிறுவனத்தின் வளாகத்தில் 200 ஆடுகள் சுற்றி திரிய விடப்படுகின்றன என்று சொன்னால் நம்புவதற்கு ஆச்சரியமாக உள்ளதா.. ஆனால் அதுதான் உண்மை.  வாரத்துக்கு ஒரு முறை வளாகத்தில் வளர்ந்துள்ள புற்களை தின்பதற்காக 200 ஆடுகளை வாடகைக்கு பிடித்து திரிய விடப்படுகிறது. இதற்கு என்ன காரணம், புல்வெட்டும் இயந்திரம் மற்றும் அதற்கான செலவும் இதுவும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருப்பதால் ஆடுகளுக்காவது புற்கள் பயன்படட்டுமே என்றுதான் கூகுள் வளாகத்தில் ஆடுகள் திரிய விடப்படுகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago