முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஏரோமொபில்

விரைவில் அறிமுகமாகவுள்ள ஏரோமொபில் எனும் புதிய பறக்கும் கார், வானிலும் சாலையிலும் பயணிக்கும் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. 5 அடி நீளம் கொண்ட இந்தப் பறக்கும் காரில், இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து பயணிக்கலாம். சாலையில் செல்லும்போது 310 மைல்கள் வரை பயணிக்குமாம்.

சிரிப்பால் அளந்தவர்

சார்லி சாப்ளின், ஒரே வருடத்தில் 12 ஹாலிவுட் படங்கள் நடித்து சாதனை புரிந்தவர், நடிப்பு மட்டுமின்றி, இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன் முகம் கொண்டவர்.

புதிய திட்டம்

விண்வெளிக்கு செல்லும் மனிதர்கள் தங்களுடைய சிறுநீரைக் கொண்டே பிளாஸ்டிக் தயாரித்துக் கொள்ளும் புதிய வகை தொழில்நுட்பத்தை நாசா கண்டுபிடித்துள்ளது. ஈஸ்ட் மற்றும் கார்பண்டை ஒக்சைட் மூலம் இந்த பிளாஸ்டிக் தயாரிக்கப்படவுள்ளது. மேலும் இதை மூலப் பொருளாக பயன்படுத்தி, 3டி பிரிண்டரில் புதிய பிளாஸ்டிக் பொருட்களை விண்வெளியில் தயாரிக்கலாம். இதனால் உருவாக்கப்படும் பொருட்களை கொண்டு நீண்ட தூரம் விண்வெளி பயணம் மேற்கொள்ளலாமாம்.

400 ஆண்டுகளாக செதுக்கப்பட்ட சிலைகள்

பொதுவாகவே ஒரு சிலையை வடிக்கவே பல மாதங்கள் ஏன் வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் மலையின் மீது மிக பிரமாண்டமான சிற்பங்களை வடிப்பது என்றால்... எத்தனை ஆண்டுகள் பிடிக்கும்... சீனாவின் ஹெனான் மாகாணத்தில் லுவோயாங்கிற்கு தெற்கே 13 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு புத்த குகை வளாகமான லாங்மென் க்ரோட்டோஸ் பண்டைய சீன சிற்ப கலையின் நேர்த்தியான பிரதிநிதித்துவத்தை எடுத்து சொல்கிறது. இங்கு மிகப் பெரிய புத்தர் சிலை 57 அடி உயரத்தில் உள்ளது. இப்பகுதியில் எழுத்துக்கள், சிற்பங்கள் பொறிக்கப்பட்ட கற்கள் 2,500 (ஸ்டெலாக்கள்), ஸ்தூபி வடிவிலான 60 பகோடாக்களும் உள்ளன.  அவற்றில் பழமையானதும் மிகப்பெரியதும் குயங்டாங் ஆகும்.  இவற்றின் கட்டுமானம் 5 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பேரரசர் சியாவோன் ஆட்சியில் தொடங்கியது. ​​வெய் வம்சம் இந்த சிற்பங்களை உருவாக்கியுள்ளது. . பேரரசர் சியாவோன் புத்த மதத்தை தீவிரமாக பின்பற்றியுள்ளார். வெய் வம்சத்திற்குப் பிறகு, டாங் மற்றும் சாங் உள்பட தொடர்ச்சியாக ஆறு வம்சங்கள் மூலம் 400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குகைகளில் சிற்பங்கள் செதுக்குவது தொடர்ந்துள்ளது. கேட்கவே ஆச்சரியமாக உள்ளதல்லவா...  இதை 2000 ஆவது ஆண்டில்  உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது.

புதிய வசதி

சுமார் 200 கோடி பயனாளர்களை கவர்ந்துள்ள ஃபேஸ்புக், தனது வாடிக்கையாளர்களுக்கு ‘மார்க்கெட் ப்ளேஸ்’ எனும் புதிய சேவையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் பொருட்களை வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ முடியும். இச்சேவையை மேலும் 17 ஐரோப்பிய நாடுகளில் அது விரிவுபடுத்தியுள்ளது.

விந்தணு குறைவு

1973 - 2011-ம் ஆண்டுவரை மேற்கொள்ளப்பட்ட 185 ஆய்வுகளின்படி, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் தொடர்ந்து ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை பாதிக்கு பாதி குறைந்துள்ளதாம். இது நீடித்தால் மனித இனத்தின் அடையாளமே அழிந்து போகுமாம். ஆனால், ஆசியா, ஆப்பிரிக்காவில் இந்த அளவு பாதிப்பு இல்லையாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்