நார்வேயில் கடும்பாறைகளாலான தீபகற்பத்தின் அடியில் உலகின் முதல் கப்பல் சுரங்கம் உருவாக்கப்பட இருக்கிறது. 118 அடி அகலம் மற்றும் 162 அடி உயரம், 5,610 அடி ஆழத்தில் உருவாக்கப்படும் இந்த கப்பல் சுரங்கம் வழியாக, 20,000 டன் எடையுள்ள கப்பல்கள் வரை செல்ல முடியும். இதற்காக சுமார் 80 லட்சம் டன் கற்பாறை வெடிவைத்து தகர்க்கப்படவுள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
நீங்கள் உடல் எடையை விரைவாகக் குறைக்க நினைத்தால், ஒரு நாளைக்குத் தேவையான உங்கள் கலோரிகளில் இருந்து 500 கலோரிகளை கழித்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, உடல் எடையை குறைக்க விரும்பும் ஓர் ஆணின் ஒரு நாளைக்கான கலோரிகள் 2000, ஒரு பெண்ணுக்கான கலோரிகள் 1500 ஆக இருக்கும்.அதற்கேற்ப நம் உணவு முறையை அமைத்துக்கொண்டால், உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்.
இன்றைக்கு உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய வைரசான கொரோனாவைப் போல சில ஆண்டுகளுக்கு முன்பு ஹெச்ஐவி எனப்படும் எய்ட்ஸ் நோய் உலகையே அச்சுறுத்தியது. தற்போது போலவே மனித நடவடிக்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. சலூன் கடைகளில் தனித்தனி ரேசர்களில் சவரம் செய்வது தொடங்கி, மருத்துவ மனைகளில் டிஸ்போசபிள் சிரிஞ்ச் எனப்படும் ஒருமுறை பயன்படுத்தப்படும் ஊசி என நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் வந்தன. இந்நிலையில் தற்போது அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஹெச்ஐவி தொற்றுக்கு ஆளாகி எந்தவித மருந்தும் எடுத்துக் கொள்ளாமல் உடல் நலம் தேறியுள்ளார். இது உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலில் உள்ள ஒரு பில்லியனுக்கும் அதிகமான செல்களை பரிசோதித்த போதிலும் கூட அவருக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பது தடமின்றி அடியோடு மறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இது உலகில் இரண்டாவது சம்பவம் என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள். இது தொடர்பான மருத்து ஆய்வு கட்டுரை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அப்பெண்ணின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி எய்ட்ஸை வெற்றிகொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது படிப்படியாக பிறருக்கும் தோன்றலாம். அதே போல எதிர்காலத்தில் கொரோனாவையும் இந்த மனித உடல் வெற்றி கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை.
உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர், மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனர் பில்கேட்ஸ். அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரராக இவர் ஆக உள்ளார். 2௦16-ம் ஆண்டில் இவரின் சொத்து மதிப்பு 75 பில்லியன் டாலர். 2009-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் பில்கேட்சின் சொத்து மதிப்பு 11% உயர்ந்து வருகிறது.
நௌலியின் ஆசனத்தை செய்து வருவதால் வயிற்றை சார்ந்த முதுகெலும்பின் பாகங்கள், அதைச்சார்ந்த நரம்புக்கூட்டங்கள் அனைத்தும் புத்துயிர் பெறும். நரம்புகள் பலம் பெறுவதால் உடல் வலுவடையும். குடல் வாயு, வயிற்று கோளாறுகள், வாயில் துர்நாற்றம் உள்பட பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். நோயின்றி ஆரோக்கியமாக வாழ தட்சிண நௌலி உறுதுணையாக இருக்கும்.
கழிவு நீக்க முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் உடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேறும். கெட்ட கொழுப்புகள் கரையும். கட்டைவிரல் நுனியால் மோதிர விரலின் அடிப் பகுதியில் உள்ள ரேகையைத் தொட்டு அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். காலை, மாலை இருவேளையும் 5 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


