முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

செட்டிநாடு அரண்மனை

இந்தியாவின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் செட்டிநாடு அரண்மனை காரைக்குடியில் அமைந்துள்ளது. அண்ணாமலைச் செட்டியார் இந்த அரண்மனையை வடிவமைத்து, 1912-ம் ஆண்டில் கட்டி முடிக்கச் செய்தார். கிழக்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளிலிருந்து அலங்கார விளக்குகள், தேக்கு மர சாமான்கள், பளிங்குக் கல், கண்ணாடிகள், கம்பளங்கள், மற்றும் ஸ்படிகங்களும் இறக்குமதி செய்யப்பட்டு செட்டிநாடு அரண்மனை கட்டப்பட்டுள்ளது.

நீரின் அவசியம்

நீரை வீணாக்காமல் சரியான முறையில் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும். நாம், ஒவ்வொருவரும் கை கழுவுவதற்காக 330 மில்லி தண்ணீரை வீணாக்குகிறோம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சோப்பை பயன்படுத்தும் முன் நமது கைகளை ஈரப்படுத்த 5மி தண்ணீரே போதுமானது. ஆனால், நாம் கைகளை கழுவ 330 மி தண்ணீரை வீணடிக்கிறோம்.

முதல் முதல்வர்

நாட்டின் உயரிய விருது பாரத ரத்னா விருது. இந்த விருதினை பெற்ற முதல் இந்திய, முதல்வர் என்ற பெருமை நமது தமிழகத்தைச் சேர்ந்த ராஜாஜிக்கு சேரும். இவர் பக்தி பாடலை ஒன்றை எழுதியுள்ளார்.அந்த பாடல் குறையொன்றும் இல்லை  மறை மூர்த்தி கண்ணா என்பதாகும்.

தூங்கினால் சம்பளம்

தூங்குவதுதான் வேலை என்றால்?  கசக்குமா  அதுவும் அந்தப் பணியை சிறப்பாகச் செய்தால் ஆண்டிற்கு $20,000 வெள்ளியை ஈட்டலாம். பிரபல சீன உடல்நல ஊட்டச்சத்து நிறுவனமான ‘நாவ் பாய்ஜின்’ இந்த 'அரிய' வாய்ப்பை வழங்குகின்றது. சீன இணையவாசிகளால் ‘உலகின் மிக சொகுசான வேலை’ என்ற பாராட்டை இது பெற்றுள்ளது. இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நிறுவனத்தின் பொருட்களைச் சோதிக்கத் துணைபுரிவார்கள். ஊட்டச்சத்துப் பொருளை உட்கொள்வது, தூக்கத்தின் தரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைச் சோதிக்க வேண்டும். பின்னர், அது குறித்த அறிக்கையை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். தூக்கமின்மையால் அவதியுறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தூக்கத்தைச் சோதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மருத்துவ உலகம்.

நோய் எதிர்ப்பு மருந்து

நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதை குணப்படுத்த நேரடி மருந்து மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி (ஆன்டிபயாடிக்) மருந்துகளையும் வழங்குவது வழக்கம். இது கிருமிகள், பாக்டீரியாக்களை கொன்று நோயை குணப்படுத்தும். வருங்காலத்தை கருத்தில் கொண்டு விஞ்ஞானிகள் புதிய நோய் எதிர்ப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே வான்கோமைசின் என்ற நோய் எதிர்ப்பு மருந்து புழக்கத்தில் இருந்தது. அந்த மருந்தால் இப்போது பலன் இல்லை. இதே மருந்தை மேலும் வீரியப்படுத்தும் வகையில் ஆய்வு செய்தனர். அதில் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து 1000 மடங்கு சக்தி கொண்டதாக இருக்கிறது. எனவே கிருமிகளால் உருவாகும் அனைத்து நோய்களையும் இது கட்டுப்படுத்துமாம்.

நத்தையின் வாயில் பல்லாயிரம் கோடி நுண் பற்கள் இருக்காம்

ஆள் பார்க்க சாதுவாக இருக்கானே இவன் என்ன செய்ய ேபாகிறான் என எவரையும் குறைவாக எடை போட்டு விடக் கூடாது. அது மாதிரிதான் மெல்லிடலி வகையை சேர்ந்த நத்தையும் பார்க்க சாதுவாக இருந்தாலும் அவையும் தன்னுள் மிகப் பெரிய ஆச்சரியங்களை கொண்டுள்ளன. மெல்ல ஊர்ந்து சென்றாலும், ஒரு பிளேடின் விளிம்பில் கூட நத்தையால் ஊர்ந்து விட முடியும்... அது மட்டுமா... பார்க்க புழு போல இருந்தாலும் அதன் வாயில் பல்லாயிரம் கோடி மைக்ரோ பற்கள் இருக்காம்.. கவலைப்படாதீர்கள் நம்மை கடிக்காது. தனக்கு தேவையான உணவை கொறித்து உண்ணத்தான் இயற்கை இப்படி அற்புதத்தை அதற்கு வழங்கியுள்ளது என்றால் ஆச்சரியம் தானே...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago