முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகில் 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான பூ மீண்டும் தோன்றியது

சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான பூ ஒன்று மீண்டும் 2020 ஆம் ஆண்டில் தன்னை இந்த பூமிக்கு வெளிப்படுத்திக் காட்டியுள்ளது. அதன் பெயர் Valviloculus pleristaminis என்பதாகும். ஆஸ்திரேலியாவின் மென்மையான தோற்றமுடைய பிளாக்ஹார்ட் சஸ்ஸாஃப்ராஸ் மலருடன் தொடர்புடையது. இது ஒரு கண்ட திட்டிலிருந்து மற்றொரு கண்ட திட்டுக்கு இடம் மாற்றமாகியுள்ளது.  ஆஸ்திரேலியாவிலிருந்து 4000 தொலைவில் உள்ள தென்கிழக்கு ஆசிய பகுதியான மியான்மரின் இந்த மலர் கண்டு பிடிக்கப்பட்டது. இதன் விட்டம் 2 மிமீ. இதன் மையத்தில் சுமார் 50 மகரந்த மொட்டுகள் சுழல் வடிவில் அமைந்திருக்கும்.  இவை கண்டம் தாண்டி சென்றது ஆச்சரியம் தானே..

சமையல் எண்ணெய்யில் விமானத்தை இயக்க முடியுமா?

இதஎன்ன புது கலாட்டா... இன்றைக்கு உலகில் கிடைக்கும் பெட்ரோலிய எண்ணெய்களில் பெரும்பாலானவற்றை இந்த விமானங்கள் தான் குடித்து தீர்க்கின்றன. ஆண்டு தோறும் கோடிக்கணக்கான லிட்டர் எரிபொருளை விமான போக்குவரத்துக்கு செலவிட வேண்டியுள்ளது. போகிற போக்கை பார்த்தால், டூவிலருக்கே பெட்ரோல் கிடைக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் உலகின் பல்வேறு நாடுகளும் பசுமை எரிபொருளுக்கு மாறத் தொடங்கியுள்ளன. அதன் தொடக்கமாக ஆஸ்திரேலியாவில் உள்ள சரக்கு விமான நிறுவனம் ஒன்று தனது விமானத்தில் பெட்ரோலுடன் சமையல் எண்ணெய்யையும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் கலந்து சோதனை ஓட்டம் நிகழ்த்தியது. இது வழக்கமான எரிபொருளை விட குறைவான கார்பனை வெளியிடுவதும் தெரிய வந்துள்ளது. எதிர்காலத்தில் சமையல் எண்ணெய்யில் விமானத்தை நாங்கள் தயார் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அது சரி.. இந்தியா போன்ற நமது நாடுகளில் பிறது எதை கொண்டு சமையலை தாளிக்க முடியும்... என்னமோ போங்க.. எதிர்காலம் தான் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லனும்.

எளியது ஆபத்து

பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் பாஸ்வேர்டை எளியதாக தேர்வு செய்து தவறு செய்துவிடுகின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு கிட்டத்தட்ட 10 மில்லியன் எளிய பாஸ்வேர்டுகள் பொதுத்தளத்தில் கசிந்திருக்கிறதாம். இதனால் இணையம் தொடர்பான குற்றங்கள் பெருக வழிவகுக்கின்றன. எளிமையான பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் மிக எளிதாக திருட வழிவகை செய்யும்.

விண்வெளியிலும்

பூமிக்கு வெளியே உள்ள குப்பைகளை அகற்ற மிகப்பெரிய மீன்வலையை அனுப்பியுள்ளது, ஜப்பான். சர்வதேச விண்வெளி மையத்திற்கு அந்த வலை ராக்கெட் மூலம் ஏவப்பட்டுள்ளது. இந்த மீன்வலை ஸ்டீல் மற்றும் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியில் இருந்து வெளிவரும் மின்சாரத்தின் மூலம் பூமியைச் சுற்றி வரும் குப்பைகளின் இயக்கத்தை மெதுவாக்கி, அவற்றை கைப்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.1 கோடி கல்வி கட்டணம் உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான பள்ளி

உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான ஹோட்டல், வாகனங்கள், நகைகள் இப்படி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான பள்ளியை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..ஆம் அப்படி ஒரு பள்ளி, சுவிஸ் நாட்டில் உள்ளது. இன்ஸ்டிடியூட் லே ரோசாய் என்ற பள்ளிதான் உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான பள்ளி. இங்கு ஆண்டு கல்வி கட்டணம் மட்டும் கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.1 கோடி. உலகின் அரசியல் தலைவர்கள், அரசர்கள் ஆகியோரின் வாரிசுகள் இங்கு தான் படிக்கின்றனர். இப்பள்ளி 1880 இல் நிறுவப்பட்டது. உலகில் உள்ள சகல வசதிகளும், சகல பயிற்சிகளும் இங்கு அளிக்கப்படுகின்றன.

ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்கலாம்?

சிலருக்கு காபி இல்லை என்றால் அன்றைய தினம் அத்தனை சீக்கிரம் விடியாது. வேறு சிலருக்கோ வேலையும் ஓடாது, மூளையும் இயங்காது. ஆகவே காபி குடித்து நாளை உற்சாகமாக வைத்துக் கொள்பவர்கள் உலகம் முழுவதும் ஏராளமானோர் நிரம்பி வழிகின்றனர். அது, சரி, காபி குடித்தால் உடலுக்கு நல்லதா கெட்டதா, இதயத்தை பலப்படுத்துமா, பலவீனப்படுத்துமா இப்படி ஆயிரம் கேள்விகள் நம்மில் பலருக்கும் எழுவது சகஜம். அத்தகைய காபி குறித்த பல்வேறு உடல்நலம் சார்ந்த கருத்துகள் நிலவி வந்த நிலையில் ஒருவர் ஒருநளைக்கு 25 கப் காபி குடித்தாலும் ஒன்றுமே ஆகாது என்கிற புதிய ஆய்வறிக்கை காபி பிரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.  காபியில் அதிகளவு காஃபின் இருப்பதால் இதய நோய் உண்டாகும் என்ற கருத்து நிலவியது. திடீரென்ற மாரடைப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், உலகளவில் கோடிக்கணக்கானோர் தினமும் காபி அருந்தி வருகின்றனர்.  இந்நிலையில், 8,000 பேரை தேர்வு செய்து லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன்படி, தினசரி ஒரு கப், மூன்று கப், பல கப் என்று காபி அருந்துபவர்களை தரம் பிடித்து ஆய்வு மேற்கொண்டதில் யாருக்கும் காபியால் எந்த பாதிப்பும் உடலில் ஏற்படவில்லை.  இதனால், நாள் ஒன்றுக்கு 25 கப் வரை காபி அருந்தினால் கூட அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று இந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. இந்த செய்தியால் காபி எனும் தேசிய பானம் காப்பாற்றப்பட்டுள்ளதாக குதூகலிக்கின்றனர் காபி பிரியர்கள்!

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago