முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆந்த்ராக்ஸ் தீவு

வடக்கு ஸ்காட்லாந்தில் இருந்து 0.6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது க்ரூய்நார்ட் தீவு. 2-ம் உலக போரின் போது பிரிட்டிஷ் இராணுவ ஆராய்ச்சியாளர்கள் இங்கு ஆந்த்ராக்ஸ் உள்ளிட்ட இரசாயன ஆயுதங்கள் பரிசோதனை செய்ததால் அந்த தீவு முற்றும் நாசமானது. இதனால் 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை மக்கள் அங்கு செல்ல அஞ்சுகிறார்கள்.

குழந்தைக்கு எமன்

15 நிமிடங்களுக்கு மேல் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான சிந்தனை படைப்புகள் தற்காலிகமாக குறைவதாக, 3 வயதுடைய 60 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

செவ்வாயில் உயிர்கள்

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரத்தை நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் கண்டறிந்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள பாறைகளில் நீரோட்டம் இருந்ததற்காக புகைப்பட சான்றுகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் சமீபகாலம் வரை உயிர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

நாசா முயற்சி

வரும் செப்டம்பர் மாதம் பென்னு குறுங்கோளை ஆய்வு செய்யும் பணிக்காக ஆசிரிஸ் ரெக்ஸ் செயற்கைக்கோள் அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. இந்த முயற்சியின் மூலம் சூரியக் குடும்பத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக அறிந்துகொள்ளவும், குறுங்கோள்களால் பூமிக்கு ஆபத்து உண்டா என்பது குறித்தும் ஆய்வு செய்ய இயலுமாம்.

சூரியனுக்கு விழா

தமிழகத்தில் தஞ்சை, ஒடிசாவில் கோனார்க் பகுதியில் சூரிய கோவில் உள்ளது. இதுதவிர, கேரளா, ஜம்மு காஷ்மீர், குவாலியர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரிலும் இந்த கோவில்கள் அமைந்துள்ளது. சூரிய தேவன் இடம் பெயர்வதை குறிக்கும்  விழாவாக மகர சங்கராந்தி வட மாநிலங்களில் பொங்கல் நேரத்தில் கொண்டாடப்படுகிறது.

போக்குவரத்து விளக்குகள் எப்போது வந்தன?

ஜே.பி.நைட் என்பவர் லண்டன் மாநகரில் 1868ஆம் ஆண்டு இப்போக்குவரத்து விளக்குகளைக் கண்டு பிடித்தார். மக்கள் நெரிசல் மிகுந்த சாலைகளில் இவ்விளக்குகள் நிறுவப்பட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்நாளில் மோட்டார் வாகனங்கள் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கவில்லை. குதிரையை அல்லது குதிரை பூட்டிய வண்டிகளை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வந்தனர்.பச்சை, சிகப்பு ஆகிய இரு வண்ணங்கள் மட்டுமே அப்போது பயன்படுத்தப்பட்டு வந்தன. உருளையில் நிரப்பப்பட்ட வாயுவினால்தான் அவ்விளக்குகள் எரிந்து வந்தன; இவ்வமைப்பு அப்போது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.அமெரிக்காவின் மிக்சிகன் நகரில் வாகனப் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாகி கட்டுப்படுத்த முடியாமல் போன நிலையில், காவல் துறையைச்சார்ந்த வில்லியம் பாட்ஸ் என்பவர் இரயில்வே சமிக்கைகளின் அடிப்படையில் போக்குவரத்து விளக்குகளை அமைக்க முயற்சி செய்தார். பச்சை, சிகப்பு, காவி பூசிய மஞ்சள் ஆகிய நிறங்களுடன் கூடிய விளக்குகளை நிறுவி இவர் தமது முயற்சியில் 1920ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் 1923ஆம் ஆண்டு போக்குவரத்து விளக்குகள் நிறுவப்பட்டன. முதலாவது தானியங்கிப் போக்குவரத்து விளக்கு 1927ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நிறுவப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago