முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஆலூ புரோட்டா & வெங்காய கிரேவி

Cooking time in minutes: 
45
Ingredients: 

ஆலூ புரோட்டா & வெங்காய கிரேவி செய்யத் தேவையான பொருள்கள்;

  1.  கோதுமை மாவு 200 கிராம்
  2.  வேகவைத்த  உருளைகிழங்கு  2
  3.  பெரிய  வெங்காயம்  2
  4.  மிளகாய்தூள் 2 ஸ்பூன் 
  5. மல்லி தூள் 2 ஸ்பூன் 
  6. .கரம் மசாலா சிறிதளவு 
  7. 7. உப்பு தேவையான அளவு 
  8.  சாட் மசாலா சிறிதளவு  
  9.  சர்க்கரை  ஒரு ஸ்பூன்
  10.  எண்ணெய் 10 ஸ்பூன்
Method: 

வெங்காய  கிரேவி  செய்முறை ;-

  1. அடுப்பில் வானொலியை வைக்க வேண்டும்.
  2. நன்கு காய்ந்த உடன் 3 ஸ்பூன் எண்ணெய் விடவும்.
  3. எண்ணெய் காய்ந்த பின்னர் நறுக்கி வைத்த 2 பெரிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
  4. ஒரு நிமிடம் மூடி வைக்க வேண்டும். 
  5. வெங்காயம் கருகாமல் வதக்க வேண்டும்.
  6. நன்கு வதங்கிய பின்னர்,தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விடவும்
  7. இதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்,  ஒரு ஸ்பூன் மல்லித்தூள் போட்டுக்  கலந்து விட வேண்டும்.
  8. தேவை எனில் சாட் மசாலா சிறிதளவு சேர்த்து கொள்ளவும்.
  9. இதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.2 ஸ்பூன் தண்ணீரை  சேர்த்து கலந்து விடவும்.
  10. 2 நிமிடம் மூடிவேக வைக்கவும்  சுவையான வெங்காயகிரேவி ரெடி.  

 

ஆலூ புரோட்டா செய்முறை:-

  1. வேகவைத்த 2 உருளைகிழங்கை எடுத்து நன்கு மசித்து கொள்ள வேண்டும்.
  2. இதில் தேவையான அளவு உப்பு  போட்டு கலந்து கொள்ளவும்.
  3. இதனுடன்  ஒரு  ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மல்லி தூள், மற்றும் ஒரு ஸ்பூன் கரம் மசாலா, சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதை தனியாக எடுத்துவைத்து கொள்ள வேண்டும்..
  4. 200 கிராம் கோதுமை மாவை சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து எடுத்துக் கொள்ளவேண்டும். 
  5. ஏற்கனவே பிசைந்து வைத்துள்ள கோதுமைமாவை சிறிதளவு எடுத்து நன்கு உருட்டிக்கொண்டு, நடுவில் சிறிது எண்ணெய் சேர்த்து உருளை கிழங்கு மசியல் வைக்க ஒரு பள்ளம் செய்து கொள்ள வேண்டும். அதில் உருளை கிழங்கு மசியலை வைத்து அந்த மாவை மூடி மேலுள்ள சிறிது மாவை எடுத்துவிட வேண்டும். 
  6. பின்னர் சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 
  7. அடுப்பில் தோசை தவாவை வைத்து நன்கு சூடு படுத்தவும்.
  8. தவா காய்ந்ததும் சப்பாத்தியை போட்டு சிறிது எண்ணெய் ஊற்றவும்.முன்னும்,பின்னும் பிரவுன் கலர் வரும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.  நல்லா வெந்திருச்சி எடுத்துலராம்
  9. சுட சுட ஆலூ பரோட்டா ரெடி
  10. ஆலூ பரோட்டாவுடன் வெங்காய கிரேவி சேர்த்து சாப்பிட்டால் சுவையாக  இருக்கும்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்