எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, குழந்தைகளை பராமரித்தல், முதியோர்களை பராமரித்தல், சுகாதாரத்தை பராமரித்தல் உள்ளிட்ட பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம், இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை அளிப்பதாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டுக்குப் பிந்தைய கருத்தரங்கில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘கல்வி, திறன் மேம்பாடு, சுகாதாரம், சுற்றுலா, விளையாட்டு, கலாச்சாரம் போன்ற துறைகள் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான முக்கிய வழிகளாகச் செயல்படுகின்றன. பொதுமக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது என்பது ஒரு திட்டமட்டுமல்ல. இந்த பட்ஜெட்டின் நோக்கமும் இந்த அரசாங்கத்தின் தீர்மானமும் இதுதான்.
நோய்கள் வராமல் தடுப்பதையும், முழுமையான சுகாதாரத்தையும் தொலைநோக்குப் பார்வையாகக் கொண்டு இந்தியா செயல்பட்டு வருகிறது. சமீப ஆண்டுகளில் நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பு கணிசமாக விரிவடைந்துள்ளது. நூற்றுக்கணக்கான மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டம், ஆரோக்கிய மையங்கள் ஆகியவற்றின் மூலம் ஒவ்வொரு கிராமத்துக்கும் சுகாதார சேவைகளின் அணுகல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நமது பாரம்பரிய முறைகளான யோகாவும், ஆயுர்வேதமும் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகின்றன.
குழந்தைகளை பராமரித்தல், முதியோர்களை பராமரித்தல், சுகாதாரத்தை பராமரித்தல் உள்ளிட்ட பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம், இளைஞர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். சுகாதாரத்துறையில் திறன் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த புதிய பயிற்சி மாதிரிகளை பரிந்துரைக்குமாறு சுகாதாரத்துறை நிபுணர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
சுகாதாரத்துறையில் டிஜிட்டல் மாற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தொலைதூரப் பகுதிகளில் மருத்துவ சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதில் தொலை மருத்துவத்தின் பங்கு அதிகரித்து வருகிறது. இதன் நன்மைகளை விரிவுபடுத்த அதிக விழிப்புணர்வும் எளிதான அணுகலும் தேவை.
நிஜ உலக பொருளாதாரத்துடன் நமது கல்வி முறையை இணைக்கும் செயல்முறையை நாம் மேலும் துரிதப்படுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன், டிஜிட்டல் பொருளாதாரம், வடிவமைப்பு சார்ந்த உற்பத்தி போன்ற பாடங்களில் நமது கவனத்தை அதிகரிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பை அதிக அளவில் அளிப்பதில் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துக்கு உள்ளது. புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்குவது, நகர பிராண்டிங்கை மேம்படுத்துவது ஆகியவை உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்க உதவும். பயிற்சி பெற்ற வழிகாட்டிகள், விருந்தோம்பல் திறன்கள், டிஜிட்டல் இணைப்பு, சமூக பங்கேற்பு ஆகியவை நமது சுற்றுலாத்துறையின் தூண்களாக மாறி வருகின்றன. தேசிய வளர்ச்சியை விரைவுபடுத்த அரசு நிறுவனங்கள், தொழில் மற்றும் கல்வித்துறைக்கு இடையே வலுவான ஒருங்கிணைப்பு அவசியம். இத்தகைய முயற்சிகளால் வளர்ந்த இந்தியாவுக்கான அடித்தளம் மேலும் வலுப்படுத்தப்படும்’’ என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


