Idhayam Matrimony

மேற்கு ஆசிய போர் பதற்றம்: பாராளுமன்ற விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

திங்கட்கிழமை, 9 மார்ச் 2026      இந்தியா
Parliament-2024-11-27

புதுடெல்லி, மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் குறித்தும், அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்தும் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானுக்கு எதிராக கடந்த பிப்.28-ம் தேதி தாக்குதலைத் தொடங்கிய நிலையில், இரு நாடுகளுக்கு எதிராக ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடும் ஏற்றத்தை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘‘மேற்கு ஆசியாவின் புவிசார் நிலைமை காரணமாக இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு மிகப் பெரிய சவால் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து குறுகிய விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும். இந்த மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயுவின் விலையும் உயர்ந்துள்ளது. வளைகுடா நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் வசிக்கிறார்கள். எனவே, இதில் அவர்களின் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் அடங்கி இருக்கிறது. எனவே, இந்த விவகாரம் குறித்து விதி எண் 176-ன் கீழ் விவாதம் நடத்தப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

அதற்கு அனுமதி மறுத்த அவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், “இது குறித்து விவாதித்து முடிவெடுக்கலாம். இப்போது இதற்கு அனுமதி அளிக்க முடியாது” என்று கூறி, இந்த விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது அறிக்கையை அளிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து, மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போரை அடுத்து, அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் விளக்க முயன்றார்.

ஜெய்சங்கரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் விவாதம் நடத்த வலியுறுத்தியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கு மத்தியில் ஜெய்சங்கர் தனது உரையை வாசித்தார். இதனால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதேபோல் மக்களவையில் காலை 11 மணிக்குக் கூடியபோது மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் மக்களவை 12 மணிக்குக் கூடியது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதற்கு ஜெகதாம்பிகா பால் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர், அவர் கேள்வி - நேரத்தை தொடங்கினார். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேற்கு ஆசிய போர் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு மத்தியில், மேற்கு ஆசிய போர் குறித்த அறிக்கையை அளிக்க வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஜெகதாம்பிகா பால் அனுமதி அளித்தார். அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள், விவாதம் வேண்டும், விவாதம் வேண்டும் என வலிறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும், ஜெகதாம்பிகா பால் இருக்கையை சூழ்ந்து கொண்டு எதிர்க்கட்சி எம்பிக்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால், அவையை 3 மணிக்கு ஒத்திவைத்து ஜெகதாம்பிகா பால் உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து