எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, வரும் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது. எனவே, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகள் உள்பட 5 மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 824 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.
இது தொடர்பாக, ஒவ்வொரு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரடியாக சென்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த மாதம் இறுதியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை வந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசினார். இந்த நிலையில், தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி எப்போது? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி நாளை (11-ந் தேதி) திருச்சியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச இருக்கிறார். அவர், டெல்லி திரும்பிய பிறகு 5 மாநில தேர்தல் தேதிக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், வரும் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், 5 மாநில தேர்தல் தேதியை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற அதிகம் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


