முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கம்பு ரசம்

Cooking time in minutes: 
20
Ingredients: 

கம்பு ரசம் செய்யத்  தேவையான பொருள்கள்;

  1. கம்பு - 100 கிராம்.
  2. மிளகு - 1 ஸ்பூன்.
  3. சீரகம் - 1 ஸ்பூன்.
  4. பெருங்காயம் - சிறிதளவு.
  5. பூண்டு-5.
  6. மல்லி,கருவேப்பிள்ளை - சிறிதளவு.
  7. தக்காளி - 3.
  8. எண்ணெய் - 2 ஸ்பூன்.
  9. கடுகு,உளுந்து - 1 ஸ்பூன்.
  10. மிளகாய் வத்தல் - 3.
  11. மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்.
  12. புளி - சிறிதளவு.
  13. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;-

  1. ஒரு பாத்திரத்தில் சிறிதளவு புளியை போட்டு  தேவையான அளவு தண்ணீர் ஊற்றி  ஒரு கப் புளிக் கரைசலை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் குக்கரை வைத்து சுத்தம் செய்த 100 கிராம் கம்பை போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 5 விசில் வரும் வரை கம்பை நன்றாக வேக வைக்கவும். 
  3. 5 விசில் வந்து விட்டது  குக்கரை திறந்து பார்ப்போம் கம்பு நன்றாக வெந்துள்ளது ஒரு பாத்திரத்தில் கம்பை வடிகட்டி ஒரு கப் நீரை தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  4. மிக்சி ஜாரில் 1 ஸ்பூன் மிளகு,1 ஸ்பூன் சீரகம்,சிறிதளவு  பெருங்காயம், 5 பூண்டு,கறிவேப்பிலை மல்லி சிறிதளவு  போட்டு அரைக்கவும்.
  5. இதனுடன் 2 தக்காளியை  நறுக்கி போட்டு அரைத்து தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
  7. எண்ணெய் சூடானவுடன் ஒரு ஸ்பூன் கடுகு மற்றும் உளுந்தம்பருப்பை போட்டு நன்றாக வதக்கவும்.
  8. இதனுடன்  3 மிளகாய் வத்தல், கருவேப்பிள்ளை, மல்லி சிறிதளவு மற்றும் 1/2 தக்காளியை போட்டு வதக்கவும்.
  9. இதனுடன் மிக்சியில அரைத்த விழுது மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.
  10. கரைத்து வைத்துள்ள ஒரு கப் புளி கரைசல் மற்றும் வடிகட்டி வைத்துள்ள ஒரு கப் கம்பு வேக வைத்த நீரை ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.
  11. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  12. சுவையான கம்பு ரசம் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago